மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு

உலகப் புகழ் பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. ஒரு மணி நேரம் கூடுதலாக போட்டி நடைபெற்றது.
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு

உலகப் புகழ் பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது.

கரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று முடிந்தது.

 மாலை 4 மணிக்கு முடிவடைய இருந்த ஜல்லுக்கட்டு போட்டி அதிக அளவிலான காளைகள் இருந்ததால் ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டது. பின்னர் மாலை 5 மணியளவில் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது.

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 18 காளைகளை அடக்கி சிறந்த வீரராக கார்த்திக் என்ற இளைஞர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.

ஜல்லிக்கட்டில் 17 காளைகளை அடக்கிய பொதும்பு கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் என்ற இளைஞர் 2-ஆம் இடம் பிடித்துள்ளார்.

10 காளைகளை அடக்கி மேட்டுப்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் 3-ஆம் இடத்தை பிடித்துள்ளார்.

காலை 8 மணிமுதல் நடைபெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் மொத்தம் 783 காளைகள், 651 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர்.

இதில் மாடுபிடி வீரர்கள் 19 பேர் உள்பட, மாட்டின் உரிமையாளர்கள், பார்வையாளர்கள் என 33 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com