
NLC officer home jewelry, money theft
கடலூர் மாவட்டம், நெய்வேலி நகரில் வசிக்கும் என்எல்சி அதிகாரி வீட்டை உடைத்து நகை, பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
நெய்வேலி, வட்டம்-19-இல் வசிப்பவர் செல்வகுமார், என்எல்சி இந்தியா நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 12-ஆம் தேதி வீட்டைப் பூட்டிக்கொண்டு குடும்பத்தாருடன் சென்னை சென்றார்.
மீண்டும்15-ஆம் தேதி இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டுத் திறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்ததில் 29 சவரன் தங்க நகைகள், ரூ.70 ஆயிரம் பணம் திருடு போனதாக தெரியவந்தது.
இதுகுறித்து நெய்வேலி நகரியம் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.