பொங்கல் விடுமுறை முடிந்து திரும்பும் மக்கள்: சுங்கச்சாவடிகளில் கடும் நெரிசல்

பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள் கூட்டத்தின் காரணமாக சுங்கச்சாவடிகளில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள் கூட்டத்தின் காரணமாக சுங்கச்சாவடிகளில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது.(கோப்புப்படம் )
பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள் கூட்டத்தின் காரணமாக சுங்கச்சாவடிகளில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது.(கோப்புப்படம் )

சென்னை: பொங்கல் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள் கூட்டத்தின் காரணமாக சுங்கச்சாவடிகளில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது.

நான்கு நாட்கள் பொங்கல் விடுமுறைக்காக சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் உட்பட தங்களது சொந்த ஊருக்கு சென்றிருந்த மக்கள் அனைவரும் தற்போது சென்னை திரும்பி வருகின்றனர். இதன்காரணமாக சுங்கச்சாவடிகளில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விக்கிரவாண்டி, ஆத்தூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அதேபோல திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே சுங்கச்சாவடியை கடக்க காத்திருக்கும் ஏராளமான வாகனங்களின் காரணமாக அங்கு நீண்ட வரிசை அணிவகுத்து நிற்கிறது.

அடுத்ததாக செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியிலும் மிகக் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

வாகனங்கள் சுங்கக் கட்டணம் செலுத்துவதற்கு பாஸ்ட் டேக் முறை அறிமுகம் செய்யப்பட்ட பிறகும் இப்படியான நெரிசல் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com