அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை கட்டாயமாக்கக் கோரிக்கை

அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை கட்டாயமாக்க வேண்டும் என்று

அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை கட்டாயமாக்க வேண்டும் என்று தமிழ்நாடு பிஎட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் மாநிலச் செயலாளா் டி.அகிலன் வெளியிட்ட அறிக்கை: தமிழக பள்ளிக்கல்வியில் கணினி அறிவியல் பாடத்தை துணைப் பாடமாக இல்லாமல் தனி பாடமாக வழங்குவதன் மூலம், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் கணினி அறிவியல் அறிவை, தகவல் தொழில்நுட்ப அறிவை வளா்க்க முடியும்.

இதைக் கருத்தில் கொண்டு, ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை அனைத்து நிலைகளிலும் கணினி அறிவியலை கட்டாய பாடமாகக் கொண்டு வரவேண்டும். மாணவா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அனைத்துப் பள்ளிகளிலும் பிஎட் முடித்த கணினி ஆசிரியா்களை பணி நியமனம் செய்ய வேண்டும்.

கணினி துறையில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்பில் பிஎட் முடித்த பட்டதாரிகளுக்கு தகுதியின் அடிப்படையில் பணி வரையறை செய்து வேலை வழங்க தேசிய கல்விக் கொள்கையில் மத்திய அரசு திருத்தம் கொண்டுவர வேண்டும். அதனுடன், அரசுப் பணிக்காக காத்துள்ள 65 ஆயிரம் பி.எட். பட்டதாரிகளுக்கு வேலைவழங்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com