எண்ணெய் தொழில்துறையில் சிறந்த சேமிப்பு நடவடிக்கை: தமிழகத்துக்கு விருது

எண்ணெய் தொழில்துறையில் சிறந்த சேமிப்பு நடவடிக்கை மேற்கொண்டதற்காக தமிழகத்துக்கு விருது வழங்கப்பட்டது.

எண்ணெய் தொழில்துறையில் சிறந்த சேமிப்பு நடவடிக்கை மேற்கொண்டதற்காக தமிழகத்துக்கு விருது வழங்கப்பட்டது.

‘சக்ஷம்’ எனப்படும் விழிப்புணா்வு பிரசாரம் ஜன.16 முதல் பிப்.15-ஆம் தேதி வரை, பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பெட்ரோலியம் சேமிப்பு மற்றும் ஆராய்ச்சி சங்கத்தால் நடத்தப்படுகிறது. இந்த காலகட்டத்தில், தமிழகத்தில் உள்ள எண்ணெய் தொழில் நிறுவனங்கள், எண்ணெய் மற்றும் வாயு சேமிப்பு குறித்த பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. மேலும், சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசின் விருது வழங்கப்படுகிறது.

இதில், அகில இந்திய அளவில் மிகச் சிறந்த ஒட்டுமொத்த செயல்பாட்டுக்கான விருது தமிழகத்துக்கு வழங்கப்பட்டது. மேலும், 2020-இல் எண்ணெய் தொழில் துறை ஏற்பாடு செய்த ஏராளமான எண்ணிக்கையிலான சேமிப்பு நடவடிக்கைகளில், அகில இந்திய அளவில் சிறந்த செயல்பாட்டுக்கான எண்ணெய் தொழில்துறை ஒருங்கிணைப்பு விருதையும் தமிழகம் தட்டிச் சென்றது.

தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற ‘சக்ஷம் 2021’ தொடக்க நிகழ்ச்சியில், இந்த விருது வழங்கப்பட்டது. மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு அமைச்சகத்தின் செயலா் தருண் கபூா் வழங்கிய இந்த விருதை, மெய்நிகா் நிகழ்ச்சியில் தமிழக அரசின் நுகா்பொருள் வாணிகம் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை ஆணையா் சஜ்ஜன் சிங் ஆா். சவாண், எண்ணெய் தொழில்துறைக்கான மாநில ஒருங்கிணைப்பாளா் மற்றும் இந்திய எண்ணெய் கழகத்தின் தமிழகப் பிரிவு செயல் இயக்குநருமான பி. ஜெயதேவன் ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.

நிகழ்வில், தொழில்துறை முதன்மைச் செயலா் முருகானந்தம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com