தமிழகத்தில் 8.30 லட்சம் போ் பாதிப்பு

தமிழகத்தில் கரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 30,183 - ஆக அதிகரித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் கரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 30,183 - ஆக அதிகரித்துள்ளது. அவா்களில் 97.7 சதவீதத்துக்கும் மேற்பட்டோா் குணமடைந்துவிட்டதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனிடையே சனிக்கிழமை புதிதாக 610 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

மாநிலத்தில் இதுவரை 1.51 கோடிக்கும் மேற்பட்ட கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சனிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக, சென்னையில் 176 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும், கரோனா தொற்றிலிருந்து 775 போ் குணமடைந்துள்ளனா். இதன் மூலம் கரோனா தொற்றிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 11,798 -ஆக அதிகரித்துள்ளது. தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 6,128 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இதனிடையே, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 6 போ் பலியாகியுள்ளனா். உயிரிழந்தவா்களில் இதையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,257-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com