முடிகொண்டான்: வீடு, கடைகளை இடித்துச் சாலை விரிவாக்கம் செய்ய மக்கள் எதிர்ப்பு

முடிகொண்டான் கிராமத்தில் வீடு, கடைகளை இடித்து, சென்னை கன்னியாகுமரி தொழிற்தடச்சாலை விரிவாக்கத் திட்டத்திற்குப் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சாலை விரிவாக்கத் திட்டத்தின் காரணமாக முடிகொண்டான் கிராமத்தில் இடிக்கப்பட உள்ள கோயில், வீடு மற்றும் கடைகள்.
சாலை விரிவாக்கத் திட்டத்தின் காரணமாக முடிகொண்டான் கிராமத்தில் இடிக்கப்பட உள்ள கோயில், வீடு மற்றும் கடைகள்.

முடிகொண்டான் கிராமத்தில் வீடு, கடைகளை இடித்து, சென்னை கன்னியாகுமரி தொழிற்தடச்சாலை விரிவாக்கத் திட்டத்திற்குப் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் எலந்தங்குடி கிராமத்திலிருந்து, மயிலாடுதுறை திருவாரூர் மாநில நெடுஞ்சாலையில், திருவாரூர் மாவட்டம் வண்டாம்பாளக் கிராமம் வரை ஆசியா வங்கி உதவியுடன் ரூபாய் 220 கோடி செலவில், சென்னை கன்னியாகுமரி தொழிற்தடச்சாலைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக திருவாரூர் மயிலாடுதுறை சாலையில் உள்ள நன்னிலம் வட்டத்தைச் சேர்ந்த முடிகொண்டான் கிராமத்தில், சாலையோரம் உள்ள எழுபதுக்கும் மேற்பட்ட வீடு, கடைகளை இடித்து பணிகள் மேற்கொள்ளப்படத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. 

இதன்காரணமாக பாதிக்கப்படுகின்ற பொதுமக்கள் 2016ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். பொதுமக்களுக்குப் பாதிப்பில்லாத வகையில் வயல்வெளி வழியாக, விவசாய நிலங்களைத் தர சம்மதிக்கின்ற விவசாயிகளின் அனுமதியுடன், அதிக மரங்களை வெட்டாமலும், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத வகையிலும், தூரம் குறைந்த அளவில், மாற்றுப்பாதையில் சாலை விரிவாக்கம் செய்திட வேண்டும், ஏழை, விவசாயத் தொழிலாளர்களின் வீடு, கடைகளை இடிக்கக் கூடாது எனத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் திங்கள்கிழமை, முடிகொண்டான் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் பொது மக்களின் கருத்தறியும் கூட்டம் நடத்தப்பட்டது. சென்னை கன்னியாகுமரி தொழிற்தட சாலைத் திட்டத்தின் தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நி. எ)சக்திவேல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் மகேஸ்வரன் மற்றும் திட்டத்தின் அதிகாரிகளும், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். 

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட முடிகொண்டான் கிராமப் பொதுமக்கள், வீடு, கடைகளை இடிப்பதன் மூலம் பொது மக்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புகளைத் தவிர்க்கும் வகையில், தாங்கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்ற மாற்று வழியில் சாலை விரிவாக்கம் செய்திட வேண்டும் எனத் தெரிவித்தனர். இதன் காரணமாக கூட்டத்தில் எவ்வித முடிவும் எடுக்கப்படாமல் பொதுமக்களின் கருத்துகளை மேலதிகாரிகளுக்கு தெரிவிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com