வைத்தீஸ்வரன் கோயிலில் 10 மாதங்களுக்குப் பிறகு அர்ச்சனைக்கு அனுமதி

வைத்தீஸ்வரன் கோயிலில் பத்து மாதங்களுக்குப் பிறகு பக்தர்களிடமிருந்து அர்ச்சனைகள் பெறப்படுகிறது.
வைத்தீஸ்வரன் கோயிலில் 10 மாதங்களுக்குப் பிறகு அர்ச்சனைக்கு அனுமதி

வைத்தீஸ்வரன் கோயிலில் பத்து மாதங்களுக்குப் பிறகு பக்தர்களிடமிருந்து அர்ச்சனைகள் பெறப்படுகிறது.

சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான தையல் நாயகி அம்பாள் உடனாகிய வைத்தியநாத சுவாமி அருள் பாலிக்கிறார். இக்கோயிலில் தனி சன்னதியில் செல்வமுத்துக்குமாரசாமி, செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன், தன்வந்திரி ஆகிய சுவாமிகள் அருள்பாலிக்கின்றனர். 

செவ்வாய் பரிகார ஸ்தலமாக இருப்பதால் கோயிலுக்கு நாள்தோறும் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநில பக்தர்களும் வருகை புரிந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்நிலையில் கரோனா பரவலைத் தடுக்க கடந்த ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் வருகை புரிய தடைவிதிக்கப்பட்டது. தொடர்ந்து மத்திய மாநில அரசுகள் பொது முடக்கத்தில் தளர்வுகள் அறிவித்தன. 

இந்நிலையில் நீண்ட இடைவேளைக்குப்பிறகு வழிபாட்டுத்தலங்கள் கடந்த மாதம் முதல்  பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இருந்தபோதிலும் பக்தர்களிடம் இருந்து அர்ச்சனைகள் பெற்று சுவாமிக்கு செய்வது தடை செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்து சுவாமியை தரிசனம் செய்து மட்டும் செல்லவும் அனுமதிக்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில் தை செவ்வாயான இன்று முதல் மீண்டும் பத்து மாதங்களுக்குப் பிறகு பக்தர்களிடமிருந்து அர்ச்சனைகள் பெறப்படுவது தொடங்கியுள்ளது. பக்தர்களிடமிருந்து சுவாமி அம்பாள் செல்வமுத்துக்குமாரசாமி அங்காரகன் சுவாமிகளுக்கு அர்ச்சனைகள் பெறப்பட்டு அர்ச்சனைகள் நடைபெற்றன.

இதேபோல் அபிஷேகங்களும் உபயதாரர்கள் செய்யவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. நீண்ட மாதங்களுக்குப் பிறகு வைத்தீஸ்வரன் கோவிலில் சுவாமிக்கு அர்ச்சனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதாக பக்தர்கள் அதிக அளவு வருகை புரிந்த சுவாமி அர்ச்சனை செய்து சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com