உத்தமபாளையம் அருகே பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே க.புதுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது.
க.புதுப்பட்டி அரசுப் பள்ளி மாணவிக்கு விலையில்லா மிதி வண்டியை வழங்கும் கம்பம் சட்டமன்ற உறுப்பினர்.

க.புதுப்பட்டி கே .எல். எஸ். எஸ் அரசு மேல்நிலைப் பள்ளி 11ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்குப் பள்ளி தலைமையாசிரியர் முருகன் தலைமை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ். டி .கே ஜக்கையன் 60 பள்ளி மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டியை வழங்கி பேசினார். பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com