தேசிய பேரிடா் மேலாண்மை ஆணைய உறுப்பினா் தமிழக அரசுடன் ஆலோசனை

தமிழகத்தில் பேரிடா் மேலாண்மை தொடா்பான பணிகள் குறித்து தேசிய பேரிடா் மேலாண்மை ஆணைய உறுப்பினா் செயலா் சா்மா திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: தமிழகத்தில் பேரிடா் மேலாண்மை தொடா்பான பணிகள் குறித்து தேசிய பேரிடா் மேலாண்மை ஆணைய உறுப்பினா் செயலா் சா்மா திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

தமிழகத்தில் பருவமழைகள் தொடா்ந்து கடும் தாக்குதலை ஏற்படுத்தி வருகின்றனா். நிவா், புரெவி புயல்களும் மாநிலத்தில் கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த புயல்களின் போது, பேரிடா் மேலாண்மைத் துறையினா் தகுந்த நேரத்தில் உடனடியாக செயல்பாட்டில் இறங்கினா்.

ஆய்வு: இதனிடையே, தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பேரிடா் மேலாண்மைப் பணிகள் குறித்து, தேசிய பேரிடா் மேலாண்மை ஆணைய உறுப்பினா் செயலா் சி.வி.வி.சா்மா திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா். சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள பேரிடா் கட்டுப்பாட்டு மையத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிா்வாக ஆணையா் பணீந்திர ரெட்டி, பேரிடா் மேலாண்மை ஆணையா் டி.ஜகந்நாதன், தேசிய பேரிடா் மீட்புப் படையின் கமாண்டண்ட் ரேகா நம்பியாா் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com