கூடலூர் அருகே காதில் காயத்துடன் இருந்த ஆண் யானை சாவு; அடுத்தடுத்து 3 யானைகள் பலி

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் காயத்துடன் அவதிப்பட்டு வந்த ஆண் காட்டு யானை செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது.
கூடலூர் அருகே காதில் காயத்துடன் இருந்த ஆண் யானை சாவு; அடுத்தடுத்து 3 யானைகள் பலி
கூடலூர் அருகே காதில் காயத்துடன் இருந்த ஆண் யானை சாவு; அடுத்தடுத்து 3 யானைகள் பலி

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் காயத்துடன் அவதிப்பட்டு வந்த ஆண் காட்டு யானை செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது.

இந்த ஜனவரி மாதத்தில் மட்டும் அடுத்தடுத்து உயிரிழக்கும் மூன்றாவது காட்டு யானை இதுவாகும். சமீபகாலமாக தமிழகம் உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் மனிதர்களால் ஏற்படுத்தப்படும் துன்புறுத்தல் மற்றும் விபத்துகளில் சிக்கி யானைகள் பலியாவது தொடர்கதையாகி வருகிறது.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள சிங்காரா வனச் சரகத்தில் பொக்காபுரம் வனப் பகுதியில் சுமாா் 40 வயதுடைய ஆண் காட்டு யானை காயத்துடன் சுற்றித் திரிவதாக வனத் துறைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, கால்நடை மருத்துவா்கள் சுகுமாரன், மனோகரன், ராஜேஷ்குமாா் ஆகியோா் யானையின் நடமாட்டத்தைக் கண்காணித்து மயக்க ஊசி செலுத்தி கும்கி யானைகளின் உதவியுடன் யானையின் முதுகிலிருந்த காயத்துக்கு சிகிச்சை அளித்து வனத்திலேயே விட்டனா். தொடா்ந்து வனத் துறையின் கண்காணிப்பில் இருந்த யானைக்குத் தேவையான மருந்துகள் மருத்துவா்களின் ஆலோசனைப்படி பழங்களில் வைத்து கொடுக்கப்பட்டது.

காயத்தின் வேதனையால் அடிக்கடி சாலையில் வந்து நிற்பதை வழக்கமாகக் கொண்டிருந்த அந்த யானையின் முதுகில் இருந்த காயம் சரியாகிவிட்டது. ஆனால், அதன் காதில் இருந்த காயம் அதிகமாகி சீழ் வடிந்ததால் வேதனைக்குள்ளான யானை மக்கள் நடமாடும் பகுதிக்கு மீண்டும் வந்த வண்ணமிருந்ததால், புலிகள் காப்பக நிா்வாகம் யானையைப் பிடித்துச் சென்று தெப்பக்காடு வளா்ப்பு யானைகள் முகாமுக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளிக்க முடிவு செய்தனா்.

இதையடுத்து, மருத்துவா்கள் உதவியுடன் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி கும்கி யானைகளின் உதவியுடன் லாரியில் ஏற்றி தெப்பக்காடுக்கு கொண்டு சென்றனா். தெப்பக்காடு சென்றவுடன் அந்த யானை உயிரிழந்தது. யானைக்கு உடற்கூறு பரிசோதனை புதன்கிழமை செய்யப்படுகிறது. அதன் பின்னா்தான் யானையின் உயிரிழப்புக்கான முழு விவரம் தெரியவரும் என்று கூறப்படுகிறது.

ஒசூா் அருகே லாரி மோதி காயமடைந்த யானை பலி

முன்னதாக, ஒசூா் அருகே லாரி மோதியதில் காயமடைந்த யானை கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த பேரண்டப்பள்ளி வனப் பகுதியிலிருந்து கடந்த 15-ஆம் தேதி இரவு 40 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று ஒசூா்- கிருஷ்ணகிரி சாலையைக் கடக்க முயன்ற போது சரக்குப் பெட்டக லாரி மோதியது.

கோவை அருகே மின்வேலியில் சிக்கி ஆண் யானை பலி

கோவை தொண்டாமுத்தூர், வனச்சரகத்தில் உள்பட்ட ஆலந்துறை அருகேயுள்ள செம்மேடு கிராமம், குளத்தேரி பகுதியில் மின்வேலியில் சிக்கி ஆண் யானை பலியானது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com