இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: நாமக்கல் மாவட்டத்தில் 14,41,201 வாக்காளர்கள்

நாமக்கல்லில் இறுதி வாக்காளர் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது. இதில், மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 14,41,201 வாக்காளர்கள் உள்ளனர்.
இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிம்டு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ்.
இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிம்டு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ்.

நாமக்கல்: நாமக்கல்லில் இறுதி வாக்காளர் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது. இதில், மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 14,41,201 வாக்காளர்கள் உள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையம் ஆகிய 6 சட்டப் பேரவை தொகுதிகள் உள்ளன. இந்த  தொகுதிகளின் இறுதி செய்யப்பட்ட வாக்காளர்கள் பட்டியலை  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கா.மெகராஜ் புதன்கிழமை அனைத்து அரசியல் கட்சிகள் பிரதிநிதிகள் முன்னிலையில்  வெளியிட்டார். 

இதில், ஆண்கள் 701104 பேர், பெண்கள் 739937 பேர், இதரர்‌ 160 பேர் என 14,41,201  மொத்த வாக்காளர்கள் உள்ளனர். மேலும் மாவட்டத்தில் 1623 வாக்குச் சாவடி மையங்கள் உள்ளன. 

இறுதி பட்டியல் வெளியீட்டில் 39357 பேர் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளனர். 24039 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக வழங்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

பட்டியல் வெளியீட்டின் போது அதிமுக, திமுக, தேமுதிக உள்ளிட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com