விழுப்புரம் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு:16.84 லட்சம் வாக்காளர்கள்

விழுப்புரத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், மாவட்டத்தில் 12,60,909 வாக்காளர்கள் உள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
விழுப்புரம் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

விழுப்புரத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், மாவட்டத்தில் 12,60,909 வாக்காளர்கள் உள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு சிறப்பு திருத்தப் பணிகள் கடந்த நவம்பர் 16 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது.

வாக்காளர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் உள்ளிட்ட பணிகள் முடிக்கப்பட்டு இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்டார்.

விழுப்புரம் மாவட்டத்தில் 8,33,206 ஆண் வாக்காளர்களும், 8,51082 பெண் வாக்காளர்களும், திருநங்கைகள் 216 ஆக மொத்தம் 16 லட்சத்து 84 ஆயிரத்து 504 வாக்காளர்கள் உள்ளனர்.

செஞ்சி, மயிலம், திண்டிவனம், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர் ஆகிய ஏழு சட்டப்பேரவை தொகுதிகளில் விழுப்புரம் தொகுதியில் அதிகபட்சமாக 2 லட்சத்து 60,970 பேரும், மயிலம் தொகுதியில் குறைந்தபட்சமாக 2 லட்சம்19,868 வாக்காளர்கள் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com