சென்னையில் போக்குவரத்து காவலரை தாக்கிய லாரி ஓட்டுநர் கைது

சென்னையில் பணியின்போது போக்குவரத்து காவலை தாக்கிய லாரி ஓட்டுர் கைது செய்யப்பட்டுள்ளார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னையில் பணியின்போது போக்குவரத்து காவலை தாக்கிய லாரி ஓட்டுர் கைது செய்யப்பட்டுள்ளார். 
சென்னை பெருநகர காவல், எம்-4 செங்குன்றம் போக்குவரத்து காவல்நிலையத்தில் பணிபுரிந்து வரும் தலைமைக் காவலர் பாஸ்கர்(50), என்பவர் நேற்று (20.01.2021) மதியம் செங்குன்றம், ஜிஎன்டி சாலை மற்றும் பாலவாயல் சந்திப்பில் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். 
அப்போது, காஞ்சிபுரத்திலிருந்து, செங்குன்றம் நோக்கி செல்வதற்காக, மணல் ஏற்றி சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி சர்வீஸ் சாலையில் எதிர்புறமாக சென்றது, உடனே, தலைமைக் காவலர் பாஸ்கர் ஓடிச் சென்று லாரியை நிறுத்தி, இவ்வழியே லாரிகள் செல்லக் கூடாது என கூறினார். 
உடனே லாரி ஓட்டுநர், தலைமைக் காவலருடன் தகராறு செய்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், லாரி ஓட்டுநர், தலைமைக் காவலர் பாஸ்கரின் சீருடையை பிடித்து இழுத்து, கையால் தாக்கியுள்ளார். 
உடனே, பாஸ்கர் காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் கொடுத்ததின்பேரில், எம்-4 செங்குன்றம் காவல் நிலைய காவல் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்து, காவலரை தாக்கிய லாரி ஓட்டுநர் ஐயப்பன் என்பவரை பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் லாரி ஓட்டுநர் ஐயப்பன், தலைமைக் காவலரை தாக்கியது தெரியவந்தது.
அதன்பேரில், பாஸ்கர் கொடுத்த புகாரின்பேரில், எம்-4 செங்குன்றம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, வள்ளியூர் லாரி ஓட்டுநர் ஐயப்பனை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஐயப்பன் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com