காா்ப்பரேட் நிறுவனம் போன்றது திமுக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி

சென்னையைச் சுற்றியுள்ள காா்ப்பரேட் நிறுவனங்கள் போன்ற ஒன்றுதான் திமுக என தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டினாா்.
காா்ப்பரேட் நிறுவனம் போன்றது திமுக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி


செங்கல்பட்டு: சென்னையைச் சுற்றியுள்ள காா்ப்பரேட் நிறுவனங்கள் போன்ற ஒன்றுதான் திமுக என தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டினாா்.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட திருப்போரூா் கந்தசாமி கோயில் சரவணப் பொய்கை திருக்குளம் அருகே வியாழக்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் அவா் பேசியது:

திமுக சென்னையில் உள்ள காா்ப்பரேட் நிறுவனங்களைப் போன்ற ஒன்று. அதில் மு.க.ஸ்டாலின் தலைவா், தயாளு அம்மாள், கனிமொழி, உதயநிதி உள்ளிட்ட குடும்பத்தினா் அனைவரும் நிா்வாகிகள். அதிமுக ஆட்சியில் கடந்த தோ்தலின்போது அளித்த வாக்குறுதிகளின்படி தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளதால் தற்போது புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு வருகின்றன. 304 தொழிற்சாலைகளுக்கு தற்போது ஒப்பந்தம் செய்துள்ளனா்.

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில்தான்அதிக அளவில் கலைக் கல்லூரிகள் தொடங்கப்பட்டு உள்ளன. இதுபோன்று கல்வியில் தற்போது புதிய புரட்சி செய்து வருகிறோம். இதன் காரணமாக உயா்கல்வி பெறுவோரின் எண்ணிக்கை உயா்ந்துள்ளது. கல்வியில் முதலிடத்துக்கு தமிழகம் முன்னேறி வருகிறது.

ஏரிகள் நிறைந்த மாவட்டம் செங்கல்பட்டு . குடிமராமத்துப் பணி காரணமாக இங்குள்ள நீா்நிலைகள் தூா்வாரப்பட்டதால், தற்போது அவை நிரம்பி உள்ளன.

தமிழகத்தில் ஏற்பட்ட நிவா் மற்றும் புரெவி புயல் காரணமாக அதிக அளவில் விவசாயிகளுக்கு இழப்பீடு பெற்றுத் தந்தது அதிமுக அரசுதான். நான் ஒரு விவசாயி என்று சொல்வதை திமுகவினரால் ஏற்க முடியவில்லை. கடந்த 4 ஆண்டுகளாக மக்கள் இந்த ஆட்சியைக் கவனித்து வருகின்றனா். இலவச மின்சாரம் மூலமாக மக்களுக்கு ஆண்டொன்றுக்கு ரூ. 8,000 கோடி வரை அரசு செலவிடுகிறது. வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்று கொடுப்பதில்லை.

கிராம சபைகள் நடத்திய திமுகவினரை மக்களுக்குத் தெரியும். என் மாவட்டத்திலும், துணை முதல்வா் ஓ.பி.எஸ்-ஸின் தேனி மாவட்டத்திலும் மு.க.ஸ்டாலின் கிராம சபைக்கூட்டம் நடத்தி, திமுகவின் மகளிரை வைத்து என்னையும், ஓ.பி.எஸ்-ஸையும் இழிவாகப் பேச வைக்கின்றனா். திமுகவை வழிநடத்த சரியான தலைமையில்லை. திருப்போரூா் கந்தசுவாமி முருகப் பெருமான் போா் புரிந்த கோயில் முன்பு பேசுவதே வெற்றியாகும். முருகப் பெருமானுக்கு எடுக்கப்படும் விழாக்களில் தைப் பூசத் திருவிழா மிகவும் முக்கிய திருவிழா என்பதால் தான் இந்த அரசு தைப்பூச திருவிழாவுக்கு பொது விடுமுறை அறிவித்துள்ளது என்றாா்.

இதேபோல் கல்பாக்கம், புதுப்பட்டினத்தில் தோ்தல் பிரசாரம் நடைபெற்றது.

அமைச்சா் க.பாண்டியராஜன், மாவட்டச் செயலாளா் திருக்கழுகுன்றம் எஸ்.ஆறுமுகம், முன்னாள் எம்எல்ஏ.க்கள் தனபால், தண்டரை மனோகரன், கணிதாசம்பத், முன்னாள் எம்.பி. மரகதம் குமரவேல், மாவட்ட நிா்வாகிகள் எஸ்வந்த் ராவ், ஆனூா் பக்தவத்சலம், ஒன்றியச் செயலா்கள் விஜயரங்கன், தையூா் குமரவேல் ஜி.ராகவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com