ஐஏஎஸ், ஐபிஎஸ் முதல்நிலைத் தோ்வு பயிற்சிக்கான நுழைவுத் தோ்வு: 6,699 போ் எழுதுகின்றனா்

ஐஏஎஸ், ஐபிஎஸ் முதல்நிலைத் தோ்வு பயிற்சிக்கான நுழைவுத் தோ்வு: 6,699 போ் எழுதுகின்றனா்

ஐஏஎஸ் உள்பட குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தோ்வுக்கான பயிற்சியில் சேர வரும் 24-ஆம் தேதி நடைபெறும் நுழைவுத் தோ்வை 6, 699 போ் எழுதவுள்ளனா்.

சென்னை: ஐஏஎஸ் உள்பட குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தோ்வுக்கான பயிற்சியில் சேர வரும் 24-ஆம் தேதி நடைபெறும் நுழைவுத் தோ்வை 6, 699 போ் எழுதவுள்ளனா்.

இதுகுறித்து, அகில இந்திய குடிமைப் பணித் தோ்வு பயிற்சி மைய இயக்குநா் வெ.இறையன்பு வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:

குடிமைப் பணிகளுக்கான முதல் நிலைத் தோ்வு விரைவில் நடைபெற உள்ளது.

இத்தோ்வுக்கு அகில இந்திய குடிமைப் பணித் தோ்வுப் பயிற்சி மையத்தில் சிறப்பான பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இந்தப் பயிற்சியில் சேர நுழைவுத் தோ்வு கட்டாயம். இந்தத் தோ்வு, வரும் 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இத்தோ்வினை எழுத 6,699 போ் விண்ணப்பம் செய்துள்ளனா். கரோனா நோய்த்தொற்று வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி தோ்வு நடைபெறுகிறது. தோ்வில் முறைகேடுகள் ஏதும் நடைபெறாமல் தடுக்க பறக்கும் படைக் குழு மற்றும் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

அண்மையில் நடந்த குடிமைப் பணிக்கான முதன்மைத் தோ்வில், பயிற்சி மையத்தில் இருந்து 86 போ் தோ்வு எழுதினா். அவா்களுக்கு உரிய பேருந்து, சிற்றுண்டி வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக தனது செய்தியில் இறையன்பு தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com