கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் தயங்க வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர்

கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் தயங்க வேண்டாம் என்று தடுப்பூசி எடுத்துக்கொண்ட தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார். 
தடுப்பூசி எடுத்துக்கொண்ட தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.
தடுப்பூசி எடுத்துக்கொண்ட தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.


சென்னை: கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் தயங்க வேண்டாம் என்று தடுப்பூசி எடுத்துக்கொண்ட தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார். 

சென்னை ராஜீவ்கராந்தி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சுகாதாரப் பணியாளர்கள் மத்தியில் கரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 

மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக கரோனா தடுப்பூசியை எடுத்துக் கொண்டேன். தமிழகத்தில் 907 பேர் மட்டுமே தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளதால் 908 ஆவது நபராக, ஒரு மருத்துவராக மற்றும் ஐஎம்ஏ உறுப்பினராக தடுப்பூசியை எடுத்துக்கொண்டுள்ளேன்.

தடுப்பூசியை எடுத்துக் கொள்வதில் எந்த தயக்கமும் வேண்டாம். தடுப்பூசி எடுத்துக்கொண்டு கரோனா தொற்று பாதிப்பில் தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக்கொண்ட அமைச்சர், தடுப்பூசி தொடர்பாக எந்தவொரு வதந்திகளையும் பரப்ப வேண்டாம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com