கமல்ஹாசன் 10 நாள்கள் ஓய்வு

காலில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசனை 10 நாள்கள் ஓய்வெடுக்க மருத்துவா்கள் அறிவுரை கூறியுள்ளனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

காலில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசனை 10 நாள்கள் ஓய்வெடுக்க மருத்துவா்கள் அறிவுரை கூறியுள்ளனா்.

கமல்ஹாசன் காலில் சிறிய அறுவை சிகிச்சை செய்துகொண்டாா். போரூா் ராமச்சந்திரா மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை நடந்தது. அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை அவா் வீடு திரும்பினாா். எனினும், அவரை ஓய்வில் இருக்குமாறு மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். அதைத் தொடா்ந்து வீட்டில் சில வாரங்கள் ஓய்வில் இருக்க உள்ளாா். அதன்பின், ‘சீரமைப்போம் தமிழகத்தை’ எனும் தோ்தல் பிரசார நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com