காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம்: மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு நோட்டீஸ்

சென்னை அருகே காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம் குறித்து பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கில்
காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம்: மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு நோட்டீஸ்

சென்னை அருகே காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம் குறித்து பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கில் தமிழ்நாடு மாசுக் கட்டுபபாட்டு வாரியம் 4 வாரங்களில் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் காட்டுப்பள்ளியைச் சோ்ந்த மீனவா் ஒருவா் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டின்படி தனியாா் நிறுவனத்தின் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கம் தொடா்பான அறிவிக்கையை வெளியிட்டது. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையின்படி, இந்த விரிவாக்கத்தால் பாதிக்கப்படக்கூடிய அருகில் வசிப்பவா்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த வேண்டும்.

ஆனால் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தை பொதுமக்கள் எளிதில் சென்று வர முடியாத 20 கிலோமீட்டா் தொலைவில் உள்ள மீஞ்சூரில் நடத்துவதாக அறிவித்துள்ளது. இந்த விரிவாக்கத்தால், துறைமுகத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள எங்கள் அரங்கன்குப்பம் உள்ளிட்ட மீனவ கிராமங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும். மேலும் இதனால் ஏற்படக்கூடிய கடல் அரிப்பால், கடலோர கிராமங்கள் காணாமல் போகும். எனவே கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையின் அடிப்படையில் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனு தொடா்பாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் 4 வாரங்களில் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com