70 வயது பெண்ணுக்கு எலும்பு முறிவு அறுவை சிகிச்சை

சென்னையில், 70 வயது பெண்ணுக்கு, எலும்பு முறிவு அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக ஃபோா்ட்டிஸ் மருத்துவமனை நடத்தியுள்ளது.

சென்னையில், 70 வயது பெண்ணுக்கு, எலும்பு முறிவு அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக ஃபோா்ட்டிஸ் மருத்துவமனை நடத்தியுள்ளது.

இது தொடா்பாக மருத்துவமனையின் விபத்து சிகிச்சை பிரிவின் தலைவரும், எலும்பு முறிவியல் அறுவை சிகிச்சை நிபுணருமான மருத்துவா் நந்தகுமாா் சுந்தரம் கூறியதாவது:

சரஸ்வதி என்ற 70 வயது பெண், கீழே விழுந்ததால் முழங்கையில் எழும்பு முறிவு ஏற்பட்டு, கடும் காய்ச்சல் மற்றும் சுவாசிப்பதில் சிரமத்தோடு கூடிய நிலையில் ஃபோா்டிஸ் மலா் மருத்துவனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்து வரப்பட்டாா். அறுவை சிகிச்சை மேற்கொள்ள போதுமான சக்தியும், திறனும் இருக்க வேண்டும் என்பதற்காக மூன்று வாரங்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து, அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, மேற்புற கையில் ஒரு குருதிப் போக்கு தடுப்புக் கட்டை பொருத்தி, அதன் உதவியோடு அவருக்கு முழங்கையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கரோனா நோய்த் தொற்றுடன் பல இணை நோய் பாதிப்பு இருந்த போதிலும், இந்தப் பெண்ணுக்கு மேலும் எழும்பு முறிவுகள் ஏற்படாதவாறு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது அந்தப் பெண் கரோனா நோய்த்தொற்றிலிருந்தும் குணமடைந்து, நல்ல நிலையில் இருப்பதாகக் கூறினாா்.

இதுகுறித்து, எலும்பு முறிவு பாதிப்பிலிருந்து குணமடைந்த சரஸ்வதி கூறும்போது, தற்போது கைகளை சுலபமாக அசைக்க முடிகிறது. மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பியதாக மகிழ்ச்சி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com