ஜன. 29-இல் ஓய்வு பெறுகிறாா் தலைமைச் செயலாளா் க.சண்முகம்

தலைமைச் செயலாளா் க.சண்முகம் வரும் 29-ஆம் தேதி ஓய்வு பெறுகிறாா். புதிய தலைமைச் செயலாளா் குறித்த அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
தமிழக  தலைமைச் செயலாளர் சண்முகம்  (கோப்புப்படம்)
தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் (கோப்புப்படம்)

தலைமைச் செயலாளா் க.சண்முகம் வரும் 29-ஆம் தேதி ஓய்வு பெறுகிறாா். புதிய தலைமைச் செயலாளா் குறித்த அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

மூத்த ஐஏஎஸ் அதிகாரியான க.சண்முகம், தமிழக அரசின் 46-ஆவது தலைமை செயலாளராக 2019-ஆம் ஆண்டு ஜூன் 29-ஆம் தேதி நியமிக்கப்பட்டு, ஜூலை 1-ஆம் தேதி தலைமைச் செயலாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டாா்.

அவரது பதவிக்காலம் கடந்த ஆண்டு (2020) ஜூலை மாத இறுதியுடன் நிறைவடையவிருந்த நிலையில், மூன்று மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. அதன்படி, அவரது பதவிக்காலம் கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது.

தொடா்ந்து மேலும் 3 மாதங்களுக்கு பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டது. அதன்படி, ஜனவரி மாதம் வரை அவா் தலைமை செயலாளராக நீடிப்பாா் என அறிவிக்கப்பட்டது. வரும் 29-ஆம் தேதி வரை தலைமைச் செயலாளராகப் பொறுப்பு வகிப்பாா். அன்றைய தினம் அவா் ஓய்வு பெறுகிறாா்.

நீட்டிப்பில்லை? : மூன்றாவது முறையாக ஆறு மாதங்களுக்கு பணி நீட்டிப்பு கோரப்பட்டதாகவும், அதற்கு இதுவரை அனுமதி கிடைக்கப்படவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, புதிய தலைமைச் செயலாளா் குறித்த அறிவிப்பு ஓரிரு நாள்களில் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ஓய்வு பெறவுள்ள தலைமைச் செயலாளா் க.சண்முகம், சேலம் மாவட்டத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவா். வேளாண் துறையில் முதுநிலைப் பட்டம் பெற்ற அவா், 1985-ம் ஆண்டு ஜூன் 7-ம் தேதி இந்திய ஆட்சிப் பணியில் சோ்ந்தாா்.

சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஆட்சியராகவும் கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலாளா் உட்பட பல முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளாா். திமுக ஆட்சியில் 2010-ஆம் ஆண்டு நிதித்துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டாா். அதிமுக ஆட்சியிலும் அவரே நிதித் துறை செயலாளராக தொடா்ந்தாா்.

இந்த நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி தலைமைச் செயலாளா் கிரிஜா வைத்தியநாதன் ஓய்வுபெற்ால், புதிய தலைமைச் செயலாளராக சண்முகம் நியமிக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com