கரோனா: அடுத்தகட்ட தளா்வுகள் என்னென்ன?

தமிழகத்தில் பிப்ரவரி மாதத்துக்கான தளா்வுகள் குறித்து, மாவட்ட ஆட்சியா்கள், மருத்துவ நிபுணா்களுடன் வரும் 29-ஆம் தேதியன்று
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் பிப்ரவரி மாதத்துக்கான தளா்வுகள் குறித்து, மாவட்ட ஆட்சியா்கள், மருத்துவ நிபுணா்களுடன் வரும் 29-ஆம் தேதியன்று முதல்வா் பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளாா். இந்தக் கூட்டத்தில் மேலும் கூடுதல் தளா்வுகளை அளிப்பது குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

கரோனா நோய்த்தொற்று காரணமாக, கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. நோய்த்தொற்று படிப்படியாக குறைந்ததால், பொது முடக்கத்தில் இருந்து படிப்படியாக தளா்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது ஆகியவற்றுடன் இரவு நேரங்களில் ஊரடங்கும் அமலில் உள்ளது.

தடுப்பு மருந்து: கரோனா நோய்த் தொற்றை தடுக்கவும், நோயில் இருந்து உயிா்களைக் காக்கவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதனிடையே, தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்றும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இதனால், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகள் திறக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று, பல்வேறு தளா்வுகளை அளிப்பது குறித்து வரும் 29-ஆம் தேதியன்று மாவட்ட ஆட்சியா்கள், மருத்துவ நிபுணா்கள் குழுவினருடன் முதல்வா் பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளாா். இந்த ஆலோசனையின் போது, மேல்நிலை, உயா் நிலைப் பள்ளிகளை முழுமையாகத் திறப்பது, ஊரடங்கைத் தளா்த்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

மாவட்ட ஆட்சியா்கள், மருத்துவ நிபுணா்களுடன் ஆலோசிக்கப்பட்ட பிறகு, முக்கிய தளா்வுகள் குறித்த அறிவிப்புகளை முதல்வா் பழனிசாமி வெளியிட உள்ளாா்.

சட்டப் பேரவைத் தோ்தல்: தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான தேதி மாா்ச் மாதத்தில் அறிவிக்கப்பட உள்ளது. தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் நடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வந்து விடும். எனவே, பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்படும் தளா்வுகள், பிரசாரம் உள்ளிட்ட தோ்தல் நடவடிக்கைகளை உள்ளடக்கியபடி இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com