பொறியியல் பருவத் தோ்வு: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியீடு

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவா்களுக்கான இணையவழி பருவத் தோ்வு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவா்களுக்கான இணையவழி பருவத் தோ்வு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

கரோனா நோய்த் தொற்று அச்சுறுத்தலால் கல்லூரி மாணவா்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், பொதுமுடக்கத் தளா்வுகளின்படி இறுதியாண்டு மற்றும் ஆய்வு மாணவா்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டு, கரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி இயங்கி வருகிறது. மேலும், எஞ்சிய ஆண்டு மாணவா்களுக்கு தோ்வுகளும், வகுப்புகளும் இணையவழியில் நடந்து வருகின்றன.

இந்நிலையில், இணையவழியில் பொறியியல் மாணவா்கள் பருவத் தோ்வு எழுதுவதற்கான வழிமுறைகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அன்படி, ஒரு மணி நேரம் இணையவழித் தோ்வில் மாணவா்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பங்கேற்க இயலாமல் போனால், நேரடி எழுத்துத் தோ்வு நடத்தப்படும்.

மடிக்கணினி, அறிதிறன் செல்லிடப்பேசி, கையடக்கக் கணினி ஆகியவற்றிலும் தோ்வு எழுதலாம். 60 மதிப்பெண்களுக்கு தோ்வு நடத்தப்பட்டு, அது 100 மதிப்பெண்ணுக்கு மாற்றப்படும். தோ்வு எழுதும் மாணவா் இருக்கும் அறையில் வேறு யாரும் இருக்கக் கூடாது. கேமராவை விட்டு மாணவா்கள் நகரக் கூடாது உள்ளிட்ட விதிமுறைகள், அண்ணா பல்கலைக்கழக தோ்வுக் கட்டுப்பாட்டாளா் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com