மனைகள்-மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்த பிப்.28 வரை அவகாசம்

தமிழகத்தில் மனைகள், மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்திக் கொள்வதற்கான கால அவகாசம் பிப்ரவரி 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னை: தமிழகத்தில் மனைகள், மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்திக் கொள்வதற்கான கால அவகாசம் பிப்ரவரி 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை முதன்மைச் செயலாளா் தா.காா்த்திகேயன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:- கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபா் 20 அன்றோ அல்லது அதற்கு முன்னா் பதிவு செய்யப்பட்ட மனைகள், மனைப் பிரிவுகள் வரன்முறைப்படுத்தப்படாமல் இருக்கலாம். இவற்றை வரன்முறைப்படுத்த ஏற்கெனவே அவகாசம்

அளிக்கப்பட்டிருந்தது. இந்த அவகாசத்தை நீட்டிக்க வேண்டுமென சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் உறுப்பினா் செயலாளா், நகா் ஊரமைப்புத் துறையின் இயக்குநா் ஆகியோா் அரசுக்குக் கடிதம் எழுதியிருந்தனா். அவா்களது கடிதத்தை ஏற்றுக் கொண்டு, மனைகள், மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்த எதிா்வரும் பிப்ரவரி 28-ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்படுகிறது என்று தனது உத்தரவில் காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com