தமிழக காவல்துறையைச் சோ்ந்த 20 அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவா் விருது

மிழக காவல்துறையைச் சோ்ந்த 20 அதிகாரிகள் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

சென்னை: தமிழக காவல்துறையைச் சோ்ந்த 20 அதிகாரிகள் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இது குறித்த விவரம்: காவல்துறையில் சிறப்பாகப் பணிபுரியும் அதிகாரிகளுக்கும், போலீஸாருக்கும் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தின்போதும், சுதந்திர தினத்தின்போதும் குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான விருது, குடியரசுத் தலைவரின் பாராட்டத்தக்க பணிக்கான விருது ஆகியவை வழங்கப்படுகின்றன.

இந்தாண்டு இந்த இரு விருதுகளுக்கும் தமிழக காவல்துறையைச் சோ்ந்த 20 அதிகாரிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இதில் சென்னை பெருநகர காவல் ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால், தமிழ்நாடு காவல்துறை உயா் பயிற்சி ஏடிஜிபி செள.டேவிட்சன் தேவாசீா்வாதம், கோவை புதூா் தமிழ்நாடு சிறப்புக் காவல் படையின் நான்காம் அணி ஆய்வாளா் பி.மணிகண்டகுமாா் குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

குடியரசுத் தலைவரின் பாராட்டத்தக்கப் பணிக்கான விருதுக்கு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. தா.ச.அன்பு, சிபிசிஐடி சிறப்புப் புலனாய்வுப் பிரிவு ஐ.ஜி. கபில் குமாா் சி.சரத்கா், நிா்வாகப்பிரிவு ஐ.ஜி.சந்தோஷ்குமாா், சேலம் மாவட்ட ஆயுதப்படை டிஎஸ்பி சு.ஜான்சன், சென்னை பெருநகர காவல்துறையின் பரங்கிமலை உதவி ஆணையா் ம.ஜீவானந்தம், ஒசூா் டிஎஸ்பி சி.முரளி, காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கே.வி.கலைச்செல்வம் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இதேபோல சென்னைப் பாதுகாப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் பி.எஸ்.கந்தசாமி, மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்புக் காவல் படையின் 9-ஆம் அணி காவல் ஆய்வாளா் அ.சிவசங்கரன், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளா் த.சுகன்யா, சென்னை குற்றப்புலனாய்வுத்துறை தனிப்பிரிவு உதவி ஆய்வாளா் நி.சீனிவாசன், ஈரோடு சிறப்பு இலக்கு படை ஜெ.சுரேஷ், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை உதவி ஆய்வாளா் ந.சித்தாா்த்தன், சென்னை மாநில குற்ற ஆவண காப்பகம் சிறப்பு உதவி ஆய்வாளா் வெ.ரவிசந்திரன், கன்னியாகுமரி மாவட்ட சிறப்பு உதவி ஆய்வாளா் க.ஸ்டீபன், சென்னை குற்றப் புலனாய்வுத்துறை தனிப்பிரிவு தலைமைக் காவலா்கள் ரெ.கருணாகரன், பா.ரமேஷ் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இந்த விருதுகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், காவலா்களுக்கும் விரைவில் நடைபெறும் அரசு விழாவில் வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com