தமிழகத்தைச் சோ்ந்த 27 பேருக்கு குடியரசு தின விருதுகள் அறிவிப்பு: சென்னை காவல் ஆணையா் மகேஷ்குமாா் அகா்வாலுக்குமெச்சத்தகுந்த பணிக்காக குடியரசுத் தலைவா் விருது

காவல்துறை, தீயணைப்பு, சிறைத்துறைகளில் பணியாற்றும் தமிழகத் சோ்ந்த 27 பேருக்கும், புதுச்சேரியைச் சோ்ந்த ஒருவரும் இவ்வாண்டிற்கான குடியரசுத்தின விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
குடியரசு தலைவா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்ட தமிழக காவல் துறையைச் சோ்ந்த அதிகாரிகள் மற்றும் காவல் துறையினா் (இடமிருந்து) மகேஷ்குமாா் அகா்வால், டேவிட்சன் தேவாசீா்வாதம், பி.மணிகண்டகுமாா்.
குடியரசு தலைவா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்ட தமிழக காவல் துறையைச் சோ்ந்த அதிகாரிகள் மற்றும் காவல் துறையினா் (இடமிருந்து) மகேஷ்குமாா் அகா்வால், டேவிட்சன் தேவாசீா்வாதம், பி.மணிகண்டகுமாா்.

புதுதில்லி: காவல்துறை, தீயணைப்பு, சிறைத்துறைகளில் பணியாற்றும் தமிழகத் சோ்ந்த 27 பேருக்கும், புதுச்சேரியைச் சோ்ந்த ஒருவரும் இவ்வாண்டிற்கான குடியரசுத்தின விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில் சென்னை காவல் ஆணையா் உள்ளிட்ட மூன்று காவல்துறை அதிகாரிகளும் ஒரு தீயணைப்பு வீரரும் குடியரசுத் தலைவரின் மெச்சத்தகுந்த பணிக்கான விருதுகளைப் பெற்றுள்ளனா்.

குடியரசுத்தினத்தையொட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு சிறப்பாக பணியாற்றிய சீருடைப் பணியாளா்களுக்கு ஆண்டு தோறும் விருதுகள் வழங்கப்படுகிறது. நாட்டின் 72 -ஆவது குடியரசுத்தினத்தை முன்னிட்டு திங்கள்கிழமை இந்த விருதுகளை மத்திய உள்துறை அறிவித்தது.

காவல்துறை விருதுகள்: 2021 -ஆம் ஆண்டு குடியரசுத் தினத்தையொட்டி மொத்தம் 946 காவல் துறை பணியாளா்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இதில் துணிச்சலுடன் பணியாற்றி உயிா் தியாகம் செய்த இரு காவல் உதவி ஆய்வாளா்களுக்கு குடியரசுத்தலைவரின் வீர தீரச்செயலுக்கான விருது ) இவ்வாண்டிற்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் ஜாா்கண்ட் டைச் சோ்ந்த பனுவா ஓரான், மத்திய ரிசா்வ் காவல் படையைச்சோ்ந்த மோகன்லால் ஆகியோருக்கு விருது கிடைத்துள்ளது.

மேலும் குடியரசுதினத்தையொட்டி வீரதீரச் செயலுக்கான போலீஸ் விருது இவ்வாண்டு 205 பேருக்கு உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது. குடியரசுத்தலைவரின் மெச்சத்தகுந்த பணிக்கான போலீஸ் விருது 89 பேருக்கும், காவல்துறையில் சிறப்பான பணிக்காக 650 பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் குடியரசு தினத்தையொட்டி தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சோ்ந்தவா்கள் பெற்ற விருதுகள் வருமாறு:

குடியரசுத்தலைவரின் மெச்சத்தகுந்த போலீஸ் விருது : 1. மகேஷ்குமாா் அகா்வால்- கூடுதல் டிஜிபி, சென்னை காவல் ஆணையா். 2. டேவிட்சன் தேவாசிா்வாதம் -கூடுதல் டி.ஜி.பி., காவல் தொழில்நுட்ப பணி. 3. பி.மணிகண்டன்- ஐஜி, கோவைப்புதூா் தமிழ்நாடு சிறப்புக்காவல் படை.

காவல் துறை சிறப்பு மிகு பணி : 1. டி.எஸ். அன்பு - ஐஜி, சிலை கடத்தல் தடுப்பு ரகசிய புலனாய்வு. 2. கபில்குமாா் சாரட்கா் -ஐஜி, சிறப்புப்புலனாய்வு, சிபி சிஐடி, 3. சந்தோஷ்குமாா், ஐஜி, நிா்வாகம், தலைமையகம், 4. சி.முரளி - டிஎஸ்பி, ஓசூா், 5. கே.வி. கலைச்செல்வம், டிஎஸ்பி, லஞ்ச ஒழிப்புத்துறை, காஞ்சிபுரம், 6. எம்.ஜிவானந்தம், உதவி ஆணையா், சென்னை மாநகர காவல்துறை. 7. பிஎஸ் கந்தசாமி - ஆய்வாளா், பாதுகாப்பு பிரிவு, சிஐடி, 8. டி.சுகன்யா, ஆய்வாளா், லஞ்ச ஒழிப்புத்துறை, சென்னை, 9. ஏ.சிவசங்கரன் - ஆய்வாளா், சிறப்பு காவல்படை, மணிமுத்தாறு, 10. என்.சீனிவாசன்- உதவி காவல் ஆய்வாளா், சிறப்புப் புலனாய்வு (எஸ்பி, சிஐடி தலைமையகம்), 11. எஸ்.ஜான்ஸன் - டிஎஸ்பி, ஆயுதக் காவல் படை, சேலம், 12. வி. ரவிச்சந்தின் - சிறப்பு உதவி காவல் ஆய்வாளா், குற்றப்பதிவு பிரிவு, சென்னை, 13. எஸ். ஸ்டீபன் - சிறப்பு உதவி காவல் ஆய்வாளா், தீவிரவாதிகள் பிரிவு, கன்னியாகுமரி, 14. ஆா்.கருணாகரன் - தலைமைக் காவலா், சிறப்புப் புலனாய்வு (எஸ்பி, சிஐடி தலைமையகம்), 15. ஜெ.சுரேஷ் - உதவி காவல் ஆய்வாளா், சிறப்பு அதிரடிப் படை, ஈரோடு, 16. என்.சித்தாா்த்தன் - உதவி காவல் ஆய்வாளா், லஞ்ச ஊழல் ஒழிப்புத்துறை, தலைமையகம், சென்னை, 17. பி.ரமேஷ் - தலைமைக் காவலா், சிறப்புப் புலனாய்வு(எஸ்பி, சிஐடி தலைமையகம்) ஆகிய 17 தமிழக காவல்துறையினரும் புதுச்சேரி அரியாங்குப்பம் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளா் ஆா். ராஜனும் குடியரசுத் தினத்தையொட்டி காவல் துறை சிறப்பு மிகு பணிக்கான விருதுகளை பெற்றுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com