மன்னார்குடியில் தைப்பூசம்: முருகன் சிலை ஊர்வலத்திற்கு அனுமதி மறுப்பு

மன்னார்குடியில், நாம் தமிழர் கட்சியின் சார்பில், தைப்பூச விழாவினையொட்டி, முருகன் சிலை ஊர்வலத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்ததுடன், சாமி சிலையைக் கட்சி நிர்வாகி வீட்டின் அறையில் வைத்துப் பூட்டினர்.
மன்னார்குடியில் தைப்பூசம்: முருகன் சிலை ஊர்வலத்திற்கு அனுமதி மறுப்பு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், நாம் தமிழர் கட்சியின் சார்பில், தைப்பூச விழாவினையொட்டி, வியாழக்கிழமை முருகன் சிலை ஊர்வலத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்ததுடன், சாமி சிலையைக் கட்சி நிர்வாகி வீட்டின் அறையில் வைத்துப் பூட்டினர்.

நாம் தமிழர் கட்சியின் சார்பு அணியான வீர தமிழர் முன்னணியின் சார்பில், தைப்பூச விழாவினையொட்டி, வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு மன்னார்குடி கீழப்பாலத்திலிருந்து முருகன்சிலை ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக, காலவாய்கரை சக்திவேல் முருகன் கோயில் வரை நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டு. இதற்கான, அனுமதிக்கு மன்னார்குடி காவல்நிலையத்தில் மனு அளிக்கப்பட்டிருந்தது. காவல்துறை சார்பில், முருகன் சிலை ஊர்வலத்திற்கு அனுமதி இல்லை எனக் கட்சி நிர்வாகிகளிடம் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், முருகன் சிலை ஊர்வலத்திற்கு நாம் தமிழர் கட்சியினர், வீரதமிழர் முன்னணியினர் ஒன்றுகூட இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததும், பேருந்து நிலையம் அருகேயுள்ள கட்சியின் மாவட்டச் செயலர் வேதா பாலா சொந்தமான வர்த்தக நிறுவனத்தில் வைத்திருந்த 4 அடி உயரமுள்ள மெழுகால் ஆன முருகன் சிலையை காவல்துறையினரால் பறிமுதல் செய்து, பின்னர் அந்த சிலையை புதிய புறவழிச்சாலையில் உள்ள வேதா பாலாவின் வீட்டிற்குக் கொண்டுவந்து ஒரு அறையில் வைத்துப் பூட்டிவிட்டு சாவியினை காவல்துறையினர் எடுத்துச் சென்றனர். தைப்பூச நாள் முடிந்த பின் சாவியினை தருவதாகத் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com