தமிழக மக்களின் நலனுக்காகவே ஒவ்வொரு திட்டத்தையும் செயல்படுத்தியவர் ஜெயலலிதா: ஓ.பன்னீர்செல்வம்

தமிழக மக்களின் நலனுக்காகவே ஒவ்வொரு திட்டத்தையும் செயல்படுத்தியவர் ஜெயலலிதா என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழக மக்களின் நலனுக்காகவே ஒவ்வொரு திட்டத்தையும் செயல்படுத்தியவர் ஜெயலலிதா என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 
சென்னை மெரீனா கடற்கரை சாலையிலுள்ள லேடி வெலிங்டன் கல்லூரியில் ஜெயலலிதாவிற்கு   9 அடி உயரத்தில் வெண்கல சிலை அமைக்கப்பட்டது. இதனை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர் கே.பி.அன்பழகன் முன்னிலையில் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் தொடர்ந்து பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,  ஜெயலலிதா 2011ல் தமிழகத்தினுடைய முதலமைச்சராக பொறுப்பேற்று, நல்ல பல திட்டங்களை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்த முதலமைச்சராக, இந்தியாவில் பல மாநிலங்கள் இருக்கிறது, ஆனால் தமிழ்நாடு போல சிறந்த நிர்வாகத்தை, சிறந்த சாதனை திட்டங்களை, அந்த சாதனை திட்டங்களை தொலைநோக்கு திட்டங்களாக நாட்டுக்கு அர்ப்பணித்த ஒரே முதலமைச்சராக ஜெயலலிதா தான் விளங்கினார்கள் என்பதனை நாம் எல்லாம் அனைவரும் நன்றாக அறிவோம்.
பல்வேறு துறைகள், அந்த துறைகளிலெல்லாம் நாட்டு மக்களுக்கும், நாட்டை முன்னேற்ற பாதையில் எடுத்து செல்வதற்கும், பொருளாதாரத்தில் மிக உயர்ந்த உண்ணத நிலையை அடைவதற்கும் அனைத்து நிலைகளிலும் நின்று துறைகள் எவ்வாறு செயலாற்ற வேண்டும், அந்த துறைகள் மூலமாக பல்வேறு சாதனை திட்டங்களை எடுத்து எப்படி பொருளாதாரத்தை வளர்ச்சி பெற செய்ய வேண்டும், அந்த திட்டங்களுடைய முழு பயனும் மக்களுடைய திருக்கரங்களில் நேரடியாக கிடைக்க செய்கின்ற ஆட்சியை எப்படி நடத்திட வேண்டும் என்று ஜெயலலிதா ஒரு தலை சிறந்த நிர்வாகியாக, இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டு முதலமைச்சராக, முன்னனி முதலமைச்சராக தங்களுடைய பொற்கால ஆட்சி 2011லிருந்து ஜெயலலிதா நிறுவினார்கள்.
தொலைநோக்கு திட்டம் 2023 என்ற ஆவணத்தை ஜெயலலிதா நாட்டு மக்களுடைய முன்னேற்றத்திற்கு, நாட்டினுடைய முன்னேற்றத்திற்கு, மக்களுடைய முன்னேற்றத்திற்கு அர்ப்பணித்தார்கள். 
தொலைநோக்கு திட்டம் 2023 என்ற ஆவணம் தமிழகத்தில் இருக்கின்ற அத்தணை துறைகளுடைய முன்னேற்றத்திற்கு அடிப்படையில் இருந்து எப்படி இந்த திட்டத்தை எடுத்து செல்வது, மக்களுக்கு எவ்வாறெல்லாம் பயனுள்ள திட்டமாக இந்த திட்டம் இருக்கும் என்று ஜெயலலிதா பார்த்து பார்த்து தான் ஒவ்வொரு திட்டங்களையும், இன்றைக்கு வாழுகின்ற மக்களும் அதனுடைய பயனை பெறவேண்டும், எதிர்காலத்தில் நம்முடைய சந்ததியினர், ஒருதிட்டம் இன்றைக்கு வந்தால் அந்த திட்டம் இன்றோடு இந்த பலனை முடிகின்ற திட்டமாக இல்லாமல், எதிர்காலத்தில் 50/ 100 ஆண்டுகளுக்கு பின்னாலே வருகின்ற நம் எதிர்கால சந்ததியினரும் அந்த திட்டதின் முழு பயனை பெறவேண்டும் என்றுதான் ஜெயலலிதா பார்த்து, பார்த்து தான் ஒவ்வொரு திட்டத்தையும் தொலைநோக்கு திட்டமாக நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்கள்.
ஒரு பரிணாம வளர்ச்சி, தொழிற்புரட்சி, தொழிற் சாலைகள் நிறுவுவதிலும், வேளாண்மை புரட்சி செய்வதிலும், பல்வேறு நிலைகளிலும் ஜெயலலிதா கிடைக்கின்ற நிதியை, மாநிலத்தில் இருந்து கிடைக்கின்ற சொந்த நிதியை, மாநிலத்தினுடைய சொந்த நிதி ஆதாரத்திலிருந்து மக்களுடைய சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்கு, சமூக பாதுகாப்பு திட்டங்களாக ஜெயலலிதா 52ரூ நிதியை, மாநிலத்தினுடைய சொந்த நிதியை ஜெயலலிதா கீழ்த்தட்டிலிருக்கின்ற மக்கள், ஏழை, எளிய மக்கள் மேல்தட்டு மக்களுக்கு இணையாக அத்துணை நிலைகளிலும் பொருளாதார நிலையை உயர்த்துவதற்கு ஜெயலலிதா, மிக பெரிய ஒரு புரட்சிகரமான திட்டங்களை சமூக, பாதுகாப்புதிட்டங்கள் மூலமாக ஜெயலலிதா உருவாக்கி நடைமுறைபடுத்தினார்கள் என்பதனை நாம் எல்லாம் நன்றாக அறிவோம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com