திருப்பூரில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.
திருப்பூரில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் வெண்ணிலா தலைமை ஏற்றார். இந்த ஆர்ப்பாட்டத்தை சிஐடியூ மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அங்கன்வாடி ஊழியர்கள் கூறியதாவது:

அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவித்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் அங்கன்வாடி ஊழியர் குடும்பத்திற்கு முறையான ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். அதே போல், பணிக்கொடை ரூ.10 லட்சம், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சம் வீதம் வழங்க வேண்டும் என்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.எல்லம்மாள், சிஐடியூ திருப்பூர் மாவட்டப் பொருளாளர் டி.குமார், மாதர் சங்கத்தின் மாநகரச் செயலாளர் சி.பானுமதி உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com