ஒரேயொரு நெல் கொள்முதல் நிலையம்: 2 ஆயிரம் விவசாயிகள் தவிப்பு

சத்தியமங்கலம் வட்டாரத்தில் ஒரேயொரு நெல் கொள்முதல் நிலையம் உள்ளதால் அறுவடையான நெல்லை விற்க முடியாமல் 2 ஆயிரம் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
நெல் கொள்முதல் நிலையம்
நெல் கொள்முதல் நிலையம்


சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் வட்டாரத்தில் ஒரேயொரு நெல் கொள்முதல் நிலையம் உள்ளதால் அறுவடையான நெல்லை விற்க முடியாமல் 2 ஆயிரம் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

சத்தியமங்கலம் வட்டாரத்தில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. பவானிசாகர் அணை நீரை நம்பி விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் ஈரோடு, கரூர் திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த 1 லட்சத்து 3500 ஏக்கர் விளைநிலங்களில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. இதன் ஒருபகுதியாக சத்தியமங்கலம், பவானிசாகர் வட்டாரத்தில் சுமார் 2 ஆயிரம் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து தற்போது அறுவடையாகிறது. கிராமப்புற பெண்கள் அறுவடை செய்த நிலையில் தற்போது இயந்திரம் மூலம் அறுவடையாகிறது.

சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடியான நெற்கதிர்கள் தற்போது முதிர்ச்சி அடைந்து அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தினந்தோறும் 1000 மூட்டைகள் மகசூல் கிடைக்கும் நெல்லை செண்பகபுதூர் கிராமத்தில் செயல்படும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக கழகத்தின் உக்கரம் கொள்முதல் மையத்துக்கு கொண்டு சென்றனர். 

இப்பகுதியில் ஒரேயொரு நேரடி கொள்முதல் மட்டுமே  செயல்படுவதால் அங்கு ஏற்கனவே 50 விவசாயிகளின்  நெல்  கொட்டப்பட்டு கொள்முதல் செய்யப்படாமல் உள்லது. இதனால் அறுவையான நெல் முட்டைகளை ஆங்காங்கே விவசாய களத்தில் போட்டு காத்திருக்கின்றனர். 

தினந்தோறும் 10 ஆயிரம் மூட்டைகள் வரத்தாக வரும் நிலையில் ஆயிரம் மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் களத்தில் போட்ட நெல்லை பாதுகாத்து வருவது பெரும் சவாலாக உள்ளது. 

நெல் அறுவடை இயந்திரம்

10 ஆயிரம் நெல் மூட்டைகள் வரும் நிலையில் போதுமான நெல் கொள்முதல் நிலையங்கள் இல்லாத காரணத்தால் மழை, பனி போன்ற காரணங்களால் நெல் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது.  

விவசாயகளின் நலன் கருதி மேலும் இரு நேரடி கொள்முதல் மையங்கள் திறக்கப்பட வேண்டும் என்பது அனைவரின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com