மருத்துவமனை என்பது நோய் தீர்க்கவா? சிகிச்சை தேவைப்படுவோரை உருவாக்கவா? கமல்ஹாசன் கேள்வி

மருத்துவமனை என்பது நோய் தீர்க்கவா? சிகிச்சை தேவைப்படுவோரை உருவாக்கவா? என திறப்பு விழாவின் போது இடிந்து விழுந்த அம்மா மினி கிளினிக் குறித்து கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கமல்ஹாசன்
கமல்ஹாசன்

மருத்துவமனை என்பது நோய் தீர்க்கவா? சிகிச்சை தேவைப்படுவோரை உருவாக்கவா? என திறப்பு விழாவின் போது இடிந்து விழுந்த அம்மா மினி கிளினிக் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். 
கரூர் மாவட்டம் கொசூரில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. போக்குவரத்துத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு அம்மா கிளினிக்கை திறந்து வைத்தார். 
அப்போது சாய்வு தரையின் கை பிடி சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில், அருகில் நின்றிருந்த குழந்தைகள் உள்பட இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு இருந்த மக்களிடம் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மன்னிப்பு கேட்டுள்ளார். 
இதுகுறித்து கமல்ஹாசன் தனது சுட்டுரையில், கரூரில், திறப்பு விழாவின்போதே இடிந்துவிழுந்திருக்கிறது அம்மா மினி க்ளினிக் சுவர்; மருத்துவமனை என்பது நோய் தீர்க்கவா? சிகிச்சை தேவைப்படுவோரை உருவாக்கவா? *அள்ளித் தெளிக்கும் அவசரக் கோலத்தால் ஏற்படும் அலங்கோலம்தானே இது?. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com