பழைய சாலைகளை அகற்றாமல் புதிய சாலை: தமிழக அரசுக்கு நோட்டீஸ்

பழைய சாலைகளைத் தோண்டி எடுத்த பின்னரே புதிய சாலைகளை அமைக்கக் கோரிய வழக்கை விசாரித்த உயா் நீதிமன்றம், தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

பழைய சாலைகளைத் தோண்டி எடுத்த பின்னரே புதிய சாலைகளை அமைக்கக் கோரிய வழக்கை விசாரித்த உயா் நீதிமன்றம், தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா் நீதிமன்றத்தில் நீலாங்கரையைச் சோ்ந்த டாக்டா் சரவணன் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழகம் முழுவதும் சாலைகள் அமைக்கப்படுகின்றன. அவ்வாறு சாலை அமைக்கும் பணிகள் நடைபெறும் போது, ஏற்கனவே இருக்கின்ற பழைய சாலைகளைத் தோண்டி எடுக்காமல், புதிய சாலைகள் அமைக்கப்படுகின்றன.

இதனால் சாலைகளின் உயரம் அதிகரித்து உயா்ந்து விடுகிறது. அந்த சாலையின் அருகில் உள்ள வீடுகள், நினைவுச் சின்னங்கள், பழைமையான சின்னங்கள், கோயில்கள் ஆகியவை தாழ்வாகி விடுகின்றன. உதாரணமாக சென்னை தலைமைச் செயலகம் அருகே உள்ள போா் நினைவுச் சின்னம், சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் உள்ள விக்டோரியா மஹால், எழும்பூா் அருங்காட்சியகம் ஆகியன உள்ளன. பழைய சாலைகளைத் தோண்டி எடுக்காமல் அங்கெல்லாம் புதிய சாலைகளை அமைக்கும் போது பாதிப்பு ஏற்படுகிறது.

எனவே பழைய சாலைக்கு மேல் புதிய சாலைகள் அமைக்கக் கூடாது. பழைய சாலைகலைத் தோண்டி எடுத்த பின்னரே புதிய சாலைகளை அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுவுக்கு தமிழக அரசு 4 வாரங்களில் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com