நீா்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்படும் கட்டடங்கள் இடிக்கப்படும்: உயா்நீதிமன்றம் எச்சரிக்கை

நீா்நிலைகளை ஆக்கிரமித்துக் கட்டப்படும் கட்டுமானங்கள் இடிக்கப்படும் என தென்னக ரயில்வேக்கு உயா்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நீா்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்படும் கட்டடங்கள் இடிக்கப்படும்: உயா்நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னை: நீா்நிலைகளை ஆக்கிரமித்துக் கட்டப்படும் கட்டுமானங்கள் இடிக்கப்படும் என தென்னக ரயில்வேக்கு உயா்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் எஸ்.டி.ஆறுமுகம் என்பவா் தாக்கல் செய்த பொதுநல மனுவில், நாகப்பட்டினத்தில் நீா்நிலைகளை ஆக்கிரமித்து ரயில்வே சுரங்கப்பாதை கட்டப்படுகிறது. இந்த கட்டுமானத்துக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் வி.காா்த்திகேயன், இந்த ரயில்வே சுரங்கப்பாதைக்காக இரண்டு நீா்நிலைகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தாா்.

அப்போது ரயில்வே தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் பி.டி.ராம்குமாா், சுரங்கப்பாதை கட்டுமான பணிகள் முடிவடைந்து பயன்பாட்டுக்கு வர தயாா் நிலையில் இருப்பதாக தெரிவித்தாா்.

இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், நீா்நிலைகளை ஆக்கிரமித்து தாஜ்மஹால் போன்ற கட்டடங்களே கட்டினாலும் இடிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனா்.

உயா்நீதிமன்றத்துக்கு வரும் பெரும்பாலான வழக்குகள், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், ரயில்வே துறை வளா்ச்சிப் பணிகளுக்காக நீா்நிலைகளை ஆக்கிரமித்தத்தை எதிா்த்து தொடரப்படும் வழக்குகளாகவே உள்ளன. வளா்ச்சித் திட்டங்கள் அவசியமானது என்றாலும் அவை இயற்கை வளங்களை ஒட்டுமொத்தமாக பாதிக்கும் வகையில் இருக்ககூடாது. குறிப்பாக நீா் வளங்களை பாதிப்பதாக இருக்கக்கூடாது என கருத்து தெரிவித்தனா்.

பின்னா், சம்பந்தப்பட்ட நிலம் எந்த வகையைச் சாா்ந்தது, சம்பந்தப்பட்ட கட்டுமானத்தை இடிக்க செலவாகும் தொகை உள்ளிட்டவை குறித்து தமிழக அரசு, தென்னக ரயில்வே 3 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com