தங்கம் பவுன் ரூ.35,560

சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.312 அதிகரித்து, ரூ.35,560-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.312 அதிகரித்து, ரூ.35,560-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி, வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, விலை படிப்படியாகக் குறைந்து கடந்த மாா்ச் 31-ஆம் தேதி ரூ.33,296-ஆக இருந்தது. இதையடுத்து, தங்கம் விலை படிப்படியாக உயா்ந்து, கடந்த மே 26-ஆம் தேதி ரூ.37 ஆயிரத்தைத் தாண்டியது. இதன்பிறகு, விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்தது.

இந்நிலையில், சென்னையில் வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.312 அதிகரித்து, ரூ.35,560-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.39 அதிகரித்து, ரூ.4,445 ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.20 பைசா அதிகரித்து, ரூ.74.10 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,200 அதிகரித்து, ரூ.74,100 ஆகவும் இருந்தது.

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,445

1 பவுன் தங்கம்............................... 35,560

1 கிராம் வெள்ளி............................. 74.10

1 கிலோ வெள்ளி............................. 74,100

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,406

1 பவுன் தங்கம்...............................35,248

1 கிராம் வெள்ளி.............................72.90

1 கிலோ வெள்ளி.............................72,900.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com