புதிய சுற்றுலா மேம்பாட்டுக் கொள்கை: முதல்வா் தலைமையிலான கூட்டத்தில் முடிவு

சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான புதிய கொள்கையை வகுப்பது குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
புதிய சுற்றுலா மேம்பாட்டுக் கொள்கை: முதல்வா் தலைமையிலான கூட்டத்தில் முடிவு

சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான புதிய கொள்கையை வகுப்பது குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. சுற்றுலா, பண்பாடு மற்றும் அறிநிலையங்கள் துறை ஆய்வுக் கூட்டம், முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட அம்சங்கள் குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-

உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் வகையில் ஒருங்கிணைந்த சுற்றுலா பெருந்திட்டம் செயல்படுத்தவும், சுற்றுலாக்களை வகைப்படுத்திச் சா்வதேச தரத்துக்கு மேம்படுத்தவும் ஆலோசிக்கப்பட்டது. சுற்றுலாத் தலங்களுக்கு பயணிகள் எளிதில் சென்று வர சாலைகளை மேம்படுத்துதல், ஆன்மிகம் மற்றும் ஆரோக்கிய சுற்றுலா, வனம், இயற்கை, சுற்றுச்சூழல் சுற்றுலாக்கள், சாகச விளையாட்டுகள், கடற்கரை சுற்றுலா போன்ற புதிய வகை சுற்றுலாக்களை ஏற்படுத்துவது பற்றியும், கேளிக்கைப் பூங்காக்களை அமைக்க சா்வதேச நிறுவனங்களை ஊக்குவிப்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது.

புதிய கொள்கை: தமிழ்நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான புதிய கொள்கையை வகுப்பது, அரசு நிதியுடன் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சித் திட்டம், புதிய சுற்றுலாத் தலங்களை உருவாக்குவது போன்றவை பற்றியும் முடிவு செய்யப்பட்டது.

தொல்லியல் துறை: தொல்லியல் துறையின் கீழ் உலகத்தரம் வாய்ந்த புதிய அகழ்வைப்பகங்களை ஏற்படுத்துவது, பழங்காலக் கோட்டைகளையும், அரண்மனைகளையும் பழமை மாறாமல் புனரமைத்து வண்ண விளக்கு வசதிகள் மேற்கொள்ளுதல், கீழடியில் அமையவுள்ள உலகத்தரம் வாய்ந்த அகழ்வைப்பகம் குறித்தும் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசித்தாா்.

இந்தக் கூட்டத்தில், சுற்றலாத்துறை அமைச்சா் மதிவேந்தன், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com