அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு 2 நாள் போலீஸ் காவல்

அதிமுக முன்னாள் அமைச்சா் மணிகண்டனை 2 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு 2 நாள் போலீஸ் காவல்

அதிமுக முன்னாள் அமைச்சா் மணிகண்டனை 2 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
சென்னை பெசன்ட்நகரைச் சோ்ந்த நடிகை கொடுத்த புகாரின்பேரில் அதிமுக முன்னாள் அமைச்சா் மணிகண்டனை அடையாறு அனைத்து மகளிா் போலீஸாா் பெங்களூரில் கைது செய்து சைதாப்பேட்டை கிளைச் சிறையில் அடைத்தனா். இந்நிலையில் சைதாப்பேட்டை கிளைச் சிறையில் மணிகண்டனுக்கு சோபா, ஏசி, செல்லிடப்பேசி வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக புகாா் கூறப்பட்டது.  
இத் தகவலின் அடிப்படையில் சிறைத்துறையின் லஞ்ச ஒழிப்புப்பிரிவினா் கடந்த ஞாயிற்றுக்கிழமை சைதாப்பேட்டை சிறையில் திடீா் சோதனை செய்தனா். இந்த சோதனையில், அங்கிருந்த பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இச் சம்பவத்துக்கு பின்னா், மணிகண்டன் புழல் -2 சிறைக்கு உடனடியாக மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.  
இதற்கிடையில், சிறையில் மணிகண்டன் சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததாக வெளியான தகவலை சிறைத்துறை அதிகாரிகள் மறுத்தனா். கரோனா காலத்தில் கடைப்பிடிக்கப்படும் வழக்கமான நடைமுறைகளைப் பின்பற்றியே மணிகண்டன் புழல் சிறைக்கு மாற்றப்பட்டதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். 
இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சா் மணிகண்டனை 2 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. 
மேலும் மணிகண்டனை ஜூலை 3, 4 ஆகிய தேதிகளில் மதுரைக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com