கூடுதல் தளர்வுகள் என்னென்ன? ஸ்டாலின் ஆலோசனை 

தமிழகத்தில் அடுத்த வாரம் ஊரடங்கு நீட்டிப்பின்போது கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.
கூடுதல் தளர்வுகள் என்னென்ன? ஸ்டாலின் ஆலோசனை 
கூடுதல் தளர்வுகள் என்னென்ன? ஸ்டாலின் ஆலோசனை 


சென்னை: தமிழகத்தில் அடுத்த வாரம் ஊரடங்கு நீட்டிப்பின்போது கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.

தலைமைச் செயலகத்தில் இன்று முக்கியத் துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். கூடுதல் தளர்வுகள் அறிவிப்பது மற்றும் கூடுதல் தளர்வுகள் அறிவித்த மாவட்டங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருவது குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியத் தகவல்: ஐவர்மேக்டின் என்றோர் அருமருந்து: மறைக்கிறதா மருத்துவத் துறை?

கரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்திருந்ததன் காரணமாக கடந்த மே மாதம் 10ஆம் தேதி முதல் தமிழகத்தில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது.

அதன்பிறகு படிப்படியாக அளிக்கப்பட்ட தளர்வுகளுடன் தொடர்ந்து பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டு வந்தது. தற்போது நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் ஜூலை 5ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது.

இந்நிலையில், கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த கூட்டத்தில் மருத்துவக் குழுவினர், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

என்னென்ன தளர்வுகள் அறிவிக்கப்படலாம்?

தமிழகத்தில் கரோனா பரவலுக்கு ஏற்றவாறு மாவட்டங்களை மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றது.

எனவே,  கட்டுப்பாடுகள் அதிகம் உள்ள மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படலாம். 

கடைகள் திறப்பு நேரம் உயர்த்தப்படலாம்.

கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் பேருந்து சேவை தொடங்கப்படவில்லை. எனவே பேருந்து சேவை தொடங்க அனுமதிக்கப்படலாம்.

தேநீர் கடைகள், உணவகங்களில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்த அனுமதிக்கப்படலாம் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com