தாட்கோ திட்டங்களில் பயன்பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

தாட்கோ மூலம் பட்டியல் இனத்தவர்களுக்கு செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தாட்கோ திட்டங்களில் பயன்பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
தாட்கோ திட்டங்களில் பயன்பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

தாட்கோ மூலம் பட்டியல் இனத்தவர்களுக்கு செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில், தாட்கோ மூலம் பட்டியல் இனத்தவர் (எஸ்சி) மற்றும் பழங்குடியினர்களுக்கு (எஸ்டி) செயல்படுத்தப்படும் கீழ்க்கண்ட பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

வயது வரம்பு 18 முதல் 65 வரை. குடும்ப ஆண்டு வருமான உச்ச வரம்பு ரூ.2.00 இலட்சம் ஆகும்.

தாட்கோ இணையதள முகவரி பட்டியல் இனத்தவராக இருப்பின் http://application.tahdco.com/ பழங்குடியினராக இருப்பின் http://fast.tahdco.com/ மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தினை படிவிறக்கம் செய்தோ / நகலினையோ, கைப்பிரதி விண்ணப்பங்களையோ சமர்ப்பிக்க வேண்டியதில்லை. விண்ணப்பிக்கும் போது

1. விண்ணப்பதாரர் பற்றிய முழு விவரங்கள்.
2. புகைப்படம்.
3. இருப்பிடச் சான்றிதழ் எண்.
4. சாதி சான்றிதழ் எண். (எண், வழங்கப்பட்ட நாள், வழங்கியவர் மற்றும் வழங்கப்பட்ட அலுவலகம்).
5. குடும்ப வருமான சான்றிதழ் எண். (எண், வழங்கப்பட்ட நாள், வழங்கப்படுவதற்கான காரணம் - நேர்காணல் நடத்தப்படும் தேதிக்கு ஒன்றரை ஆண்டுகள் முன்புவரை  வருமானச்சான்று பெற்றிருக்கலாம். அதாவது வருமானச் சான்றின் வயது ஒன்றரை ஆண்டு வரை இருக்கலாம்.
6. பட்டா / சிட்டா–(நிலம் வாங்குதல் மற்றும் நிலம் மேம்பாடு திட்டம்)
7. குடும்பஅட்டை எண்.
8. ஆதார் எண்.
9. விண்ணப்பதாரரின் தொலைபேசி/கைபேசி எண்.
10. விண்ணப்பதாரரின் மின்னஞ்சல் முகவரி
11. திட்டங்களின் விவரங்கள் முதலியவற்றை இணையதளத்தில் கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும். ஒன்று முதல் பத்து வரை உள்ள விவரங்கள் இன்றியமையாதவை.

தொலைபேசி / கைபேசி எண். மற்றும் மின்னஞ்சல் முகவரி இல்லாதவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும். மேற்குறிப்பிட்ட ஆவணங்கள் தவிர, திட்டங்களுக்கு ஏற்றாற்போல் தேவைப்படும் ஆவணங்களையும் சமர்ப்பிக்கவேண்டும்.

விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறுவதற்கு அறிவிக்கப்பட்ட நாட்களில் 24 மணி நேரமும் பதிவு செய்யலாம். மேலும், விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டமேலாளர் அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் மட்டும் பதிவு செய்யலாம். இதற்கான விண்ணப்பம் ஒன்றிற்கு பயனாளியிடமிருந்து ரூ.60/- வசூல் செய்யப்படும். விண்ணப்பம் பதிவேற்றம் செய்யப்பட்டவுடன் ஒப்புகை ரசீது விண்ணப்பதாரருக்கு வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் இரண்டாம் தளத்தில் உள்ள மாவட்ட மேலாளர், தாட்கோ அலுவலகத்தை அணுகவும். தொலைபேசி எண். 044-25246344

இத்தகவலை சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜெ.விஜயாராணி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com