
பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணி காரணமாக, மண்டபம்-ராமேஸ்வரம் இடையே ரயில் சேவை ஜூலை 14-ஆம் தேதி வரை பகுதி ரத்து செய்யப்படுகிறது.
பாம்பன் பாலத்தில் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக, ரயில் போக்குவரத்து ஜூலை 14-ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பாம்பன் பாலத்தில் காலி பெட்டிகள் கொண்ட ரயில்கள் மட்டும் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே, மண்டபம்-ராமேஸ்வரம் இடையே ரயில் சேவை ஜூலை 14- ஆம் தேதி வரை பகுதி ரத்து செய்யப்படுகிறது.
இந்தத் தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.