சரியும் மேட்டூர் அணை நீர்மட்டம்: கவலையில் டெல்டா விவசாயிகள் 

மேட்டூர் அணையின் நீர்மட்டம் மளமளவென சரிந்து வருவதால் காவிரி டெல்டா விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
சரியும் மேட்டூர் அணை நீர்மட்டம்: கவலையில் டெல்டா விவசாயிகள் 
சரியும் மேட்டூர் அணை நீர்மட்டம்: கவலையில் டெல்டா விவசாயிகள் 

மேட்டூர் அணையின் நீர்மட்டம் மளமளவென சரிந்து வருவதால் காவிரி டெல்டா விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

மேட்டூர் அணை பாசனம் மூலம் சேலம்,  நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், கரூர் உள்ளிட்ட 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. 

குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12ல் தண்ணீர் திறக்கப்படும். நடப்பு ஆண்டில் அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இருந்ததால் பருவமழையை எதிர்நோக்கி ஜூன் 12ல் குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. துவக்கத்தில் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் திறக்கப்பட்ட நீரின் அளவு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக அதிகரித்கப்பட்டது.

பாசனப்பகுதிகளில் பாசனத்தேவை அதிகரித்ததால் கடந்த 26ந்தேதி முதல் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்த நிலையில் அணையிலிருந்து பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர் மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

ஜூன் 12ல் 96.81 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 78.31 அடியாக சரிந்தது. கடந்த 24 நாட்களில் நீர்மட்டம் 18.50 அடி சரிந்துள்ளது. நாள் ஒன்றுக்கு 1.28 அடி நீர் மட்டமும் நான்கு நாட்களுக்கு 5 டி.எம்.சி நீர் இருப்பும் சரிந்து வருகிறது.

இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையில் 40.29 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. இதில் சுமார் 10 டி.எம்.சி தண்ணீரை மேட்டூர் அணையின் மீன்வளத்தை பாதுகாக்கவும், குடிநீர் தேவைக்காகவும் இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும். மீதம் உள்ள 30 டி.எம்.சி. தண்ணீர் மூன்று வாரங்களுக்கு மட்டுமே பாசனத்திற்கு போதுமானதாக இருக்கும். அதன் பிறகு பருவமழை கைகொடுத்தால் மட்டுமே காவிரி டெல்டா பாசனத்திற்கு தொடர்ந்து தண்ணீர் கிடைக்கும் நிலை உருவாகி உள்ளது. இதனால் காவிரி டெல்டா விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இன்று காலை மேட்டூர் அணையின் நீர் மட்டம் 78.31அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 674 கன அடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. அணையின் நீர் இருப்பு 40.29 டி.எம்.சியாக இருந்தது.

அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால் மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 15,000 கன அடியிலிருந்து 12000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com