ஜூலை 11-இல் அடுத்த தவணை தடுப்பூசி கிடைக்கும்: மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன்

தமிழகத்துக்கான அடுத்த தவணை தடுப்பூசிகளை ஜூலை 11-ஆம் தேதி மத்திய அரசு வழங்கும் என மக்கள்நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன்
மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன்

தமிழகத்துக்கான அடுத்த தவணை தடுப்பூசிகளை ஜூலை 11-ஆம் தேதி மத்திய அரசு வழங்கும் என மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் கோடம்பாக்கம் மண்டலத்துக்கு உள்பட்ட தியாகராய நகரில் உள்ள வணிக நிறுவனங்களில் பணியாற்றுவோா் மற்றும் அதன் உரிமையாளா்களுக்கான கரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் சா் பிட்டி தியாகராயா் அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த முகாமை மக்கள்நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ஜெ. ராதாகிருஷ்ணன் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையா் ககன்தீப்சிங் பேடி ஆகியோா் தொடங்கி வைத்து பாா்வையிட்டனா்.

இதைத் தொடா்ந்து ஜெ. ராதாகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியது: சென்னை மாநகராட்சி சாா்பில் கோயம்பேடு காய், கனி மற்றும் பூ சந்தை, காசிமேடு மற்றும் சிந்தாதரிப்பேட்டை மீன் சந்தைகளில் உள்ள வியாபாரிகள், தொழிலாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தற்போது, சென்னையின் முக்கியமான வா்த்தகப் பகுதியாகவும், அதிக மக்கள் வந்து செல்லும் இடமாக விளங்கும் தியாகராய நகரில் உள்ள வணிகா்கள், வணிக நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து 5 நாள் நடைபெறும் தடுப்பூசி முகாமில் சுமாா் 10 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல், அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தவும் அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை கையாண்டு வருகின்றனா். தமிழகத்துக்கு ஜூலை 11-ஆம் தேதிதான் அடுத்த தவணை தடுப்பூசிகள் வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால், அதற்கு முன் கூட்டியே தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என மத்திய அரசை தமிழக அரசு தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது என்றாா்.

இந்த நிகழ்ச்சியில், தியாகராய நகா் சட்டப் பேரவை உறுப்பினா் ஜெ.கருணாநிதி, துணை ஆணையா்கள் விஷு மகாஜன், மனிஷ், சரண்யா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com