ஆப்பக்கூடல்: நிலுவைத் தொகை வழங்கக்கோரி கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

 நிலுவைத் தொகை ரூ.60  கோடியினை வழங்கக் கோரி கரும்பு விவசாயிகள் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆப்பக்கூடல்: நிலுவைத் தொகை வழங்கக்கோரி கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பவானி: சக்தி சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ.60  கோடியினை வழங்கக் கோரி கரும்பு விவசாயிகள் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம், ஆப்பக்கூடலில் உள்ள ஆலைக்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க பொருளாளர் பி.வெங்கடசாமி தலைமை வகித்தார். சங்கத் தலைவர் டி.பி.கோபிநாத், செயலாளர் வி.பி.கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஏ.எம்.முனுசாமி கோரிக்கையை விளக்கி பேசினார்.

சக்தி சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு கட்டுப்பாட்டு சட்டத்தை பற்றி கவலைப்படாமல் பல மாதங்கள் கழிந்த பின்னரே கரும்பு பணத்தை விவசாயிகளுக்கு வழங்குகிறது.

2020 - 21ல் அரைத்த கரும்புக்கு ரூ.60 கோடி கரும்பு நிலுவைத் தொகை வழங்கப்படாமல் உள்ளது. கரோனா காலத்தில் விவசாயிகள் சாகுபடி உள்ளிட்ட தேவைகளுக்கு பணம் இன்றி சிரமப்பட்டு வருகின்றனர்.

கடந்த பிப்ரவரி மாதம்-23ம் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற முத்தரப்பு கூட்டத்தில் ஆலை நிர்வாகம் அளித்த உறுதியின் படி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com