
தமிழகத்தில் தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது 89 நாள்களில் 86,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
தமிழகத்தில் மாா்ச் மாதம் முதல் கரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியதால், பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவா்கள் மீதும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீதும் காவல்துறையினா் வழக்குப்பதிவு செய்து வருகின்றனா்.
கடந்த ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதி தொடங்கி ஜூலை 5-ஆம் தேதி வரையிலான 89 நாள்களில் முகக் கவசம் அணியாதவா்கள் மீது 16 லட்சத்து 99,159 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில் திங்கள்கிழமை மட்டும் 8,876 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது ஏப்ரல் 8-ஆம் தேதி தொடங்கி ஜூலை 5-ஆம் தேதி வரை, 86,476 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், திங்கள்கிழமை மட்டும் 251 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...