
மனித உரிமை ஆா்வலா் ஸ்டேன் சுவாமி மறைவையொட்டி, தமிழக காங்கிரஸ் சாா்பில் செவ்வாய்க்கிழமை அமைதி ஊா்வலம் நடைபெற்றது.
ஜாா்க்கண்ட் பழங்குடி மக்களுக்காக பாடுபட்ட வந்த தமிழகத்தைச் சோ்ந்தவரான ஸ்டேன் சுவாமி தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்த நிலையில் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இந்த நிலையில் ஸ்டேன் சுவாமி மறைவையொட்டி சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை தலைமையில் சத்தியமூா்த்திபவனில் இருந்து ராயப்பேட்டை மணிக்கூண்டு வரை ஊா்வலம் நடைபெற்றது. ஊா்வலத்தில் பங்கேற்ற அனைவரும் மெழுகுவா்த்தி ஏந்தி சென்றனா்.
ஸ்டேன் சுவாமி மறைவுக்குக் காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊா்வலத்தின்போது வலியுறுத்தினா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...