தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்தது

தங்கம் விலை வியாழக்கிழமை காலை நிலவரப்படி ஒரு சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.36,080க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்தது
தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்தது


சென்னை: தங்கம் விலை வியாழக்கிழமை காலை நிலவரப்படி ஒரு சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.36,080க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் புதன்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலையில் மாற்றமின்றி ஒரு சவரன் தங்கம் ரூ.36,160க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.80 குறைந்துள்ளது.

தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வந்தநிலையில், செவ்வாய்க்கிழமை அன்று ஒரு சவரன் தங்கம் ரூ.36 ஆயிரத்தைத் தாண்டியது. இந்நிலையில், புதன்கிழமை விலையில் மாற்றமின்றி ரூ.36,160க்கு நீடித்தது. இந்த நிலையில் இன்று ரூ.80 குறைந்து ரூ.36,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.10 குறைந்து ரூ.4,510 ஆக உள்ளது.

அதேநேரத்தில் வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு  90 பைசா குறைந்து, ரூ.73.50 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.900 குறைந்து, ரூ.73,400 ஆகவும் இருந்தது.

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,510
1 பவுன் தங்கம்...............................36,080
1 கிராம் வெள்ளி.............................73.50
1 கிலோ வெள்ளி.............................73,500


புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,520
1 பவுன் தங்கம்...............................36,160
1 கிராம் வெள்ளி.............................74.40
1 கிலோ வெள்ளி.............................74,400
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com