ஒகேனக்கல் குடிநீர் விநியோகம்: அமைச்சர் கே.என். நேரு ஆய்வு

தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் விநியோகம் தொடர்பாக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.
தருமபுரி அருகே அதகப்பாடியில் ஒகேனக்கல் குடிநீர் நிலையத்தில் ஆய்வு செய்கிறார் அமைச்சர் கே.என்.நேரு.
தருமபுரி அருகே அதகப்பாடியில் ஒகேனக்கல் குடிநீர் நிலையத்தில் ஆய்வு செய்கிறார் அமைச்சர் கே.என்.நேரு.

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் விநியோகம் தொடர்பாக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.

தருமபுரி அருகே உள்ள அதகப்பாடியில் அமைந்துள்ள ஒகேனக்கல் குடிநீர் வழங்கும் நிலையம், அங்குள்ள தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, குளோரின் அறை ஆகியற்றைப் பார்வையிட்ட அமைச்சர் கே.என்.நேரு, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரிடம் ஒகேனக்கல் குடிநீர் முழு அளவில், புளோரைடு தண்ணீரில் கலக்காமல் விநியோகம் செய்யப்படுகிறதா? என கேட்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து பென்னாகரம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள நீர் ஏற்றும் நிலையம், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றை பார்வையிட்டார். இதையடுத்து தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், பொறியாளர்கள் ஆகியோர் ஆய்வு செய்தார். இதில், குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர் தட்சணாமூர்த்தி, தருமபுரி மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி, சட்டப் பேரவை உறுப்பினர்கள் ஜி.கே.மணி (பென்னாகரம்), எஸ்.பி.வெங்கடேஸ்வரன் (தருமபுரி), ஒய்.பிரகாஷ் (ஒசூர்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com