
சென்னையில் ஜூலை 12-ல் மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
சென்னையில் வரும் திங்கள்கிழமை ஜூலை 12ஆம் தேதி மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து மின்வாரியம் அனுப்பியிருக்கும் செய்திக் குறிப்பில், நீலாங்கரை பகுதியில் மேலே செல்லும் உயரழுத்த மின்கம்பிகளை புதைவிடமாக மாற்றும் பணியும் மற்றும் (ஆர்எம்யு) வளைய சுற்றுதர அமைப்பு செயலாக்த்திற்கு கொண்டு வரும் பணிகளும் நடைபெறுவதால் வரும் 12.07.2021 திங்கள் அன்று கீழ்காணும் பகுதிகள் காலை 9.00 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யபடும் என்று தெரிவிக்கபடுகிறது.
1) ப்ளு பீச் ரோடு
2) மரக்காயர் நகர் 1 முதல் 7ம் தெரு வரை
3) கபாலீஸ்வரர் நகர் 4வது பிரதான சாலை
4) சீ வியுவ் அவென்யூ
5) முருகம்பாள் அவென்யூ
6) பெரிய நீலாங்கரை குப்பம்
7) கேசுரினா டிரைவ் ஒரு பகுதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.