செங்கல்பட்டு: பெட்ரோல், டீசல் விலையுயர்வைக் கண்டித்து காங். போராட்டம்

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து நூதன முறையில் மாட்டுவண்டி சைக்கிள் பேரணியுடன் செங்கல்பட்டு காங்கிரஸ் கட்சியினர் கண்டன  ஆர்ப்பாட்டம்.
செங்கல்பட்டு: பெட்ரோல், டீசல் விலையுயர்வைக் கண்டித்து காங். போராட்டம்

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து செங்கல்பட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் திங்கட்கிழமை மாலை 
செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் காமராஜர் சிலை அருகில் நூதன முறையில் மாட்டுவண்டி மற்றும் சைக்கிள் பேரணியுடன்  கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்தும் விவசாயிகளுக்கு எதிரான மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட மூன்று கருப்பு வேளாண் சட்டம் என மக்களை துயரத்தில் தள்ளிக் கொண்டிருக்கும் மத்திய அரசைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் சார்பாக செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து   மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து மக்களின் அத்தியாவசிய தேவையான பெட்ரோல் டீசல் விலை குறைக்க மத்திய அரசை கண்டித்து கண்டன நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சைக்கிள் பேரணி மற்றும் மாட்டு வண்டி ஒட்டியும் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஆர். சுந்தரமூர்த்தி தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். செங்கல்பட்டு நகர தலைவர் ஜே.பாஸ்கர் வரவேற்று பேசினார்.

டி.ஜெயராமன், ஆர் .குமரவேல், ரியாஸ் பாய் ,ஏ.ஜி. பார்த்தசாரதி,  ஜெயராமன், பாண்டியன், உமாபதி, இளைஞர் காங்கிரஸ் தலைவர் பால விக்னேஷ், வின்சென்ட்   உள்ளிட்டோர் மாவட்ட, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய அரசைக் கண்டித்து கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com