சென்னையில் நரிக்குறவர்களுக்கு கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

கரோனா பெருந்தொற்றுக்கு எதிரான பேராயுதமாக விளங்குவது கரோனா தடுப்பூசிகள். உலகளவில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
சென்னையில் நரிக்குறவர்களுக்கு கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
சென்னையில் நரிக்குறவர்களுக்கு கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்


சென்னை: கரோனா பெருந்தொற்றுக்கு எதிரான பேராயுதமாக விளங்குவது கரோனா தடுப்பூசிகள். உலகளவில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

நாட்டில் இதுவரை 38 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. சென்னையைப் பொறுத்தவரை இதுவரை 26.97 லட்சம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இருந்தாலும், சென்னையில் பல்வேறு பிரிவினருக்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலத்தில் ஏரிக்கரை சாலையில் உள்ள நரிக்குறவர் காலனியில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் இன்று துவக்கி வைத்துப் பார்வையிட்டனர்.

இந்த சிறப்பு முகாமில், அப்பகுதியில் உள்ள நரிக்குறவர்கள் ஏராளமானோர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com