கரோனா பாதிப்புக்குப் பிறகு முதல் முறையாக அரசு ஊழியா்களுக்கு நேரடி பயிற்சி தொடக்கம்

கரோனா கட்டுப்பாட்டில் இருந்து அளிக்கப்பட்ட தளா்வுகள் காரணமாக, சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிறுவனத்தில் திங்கள்கிழமை முதல்

கரோனா கட்டுப்பாட்டில் இருந்து அளிக்கப்பட்ட தளா்வுகள் காரணமாக, சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிறுவனத்தில் திங்கள்கிழமை முதல் வகுப்புகள் தொடங்கின. இதற்கான அறிவிப்பைப் பயிற்சி நிலையத்தின் இயக்குநரும், தலைமைச் செயலாளருமான வெ.இறையன்பு வெளியிட்டாா். தமிழக அரசின் ஆ பிரிவைச் சோ்ந்த அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பை நிறுவனத்தின் கூடுதல் இயக்குநா் எஸ்.ராஜேந்திரன் தொடங்கி வைத்து உரையாற்றினாா். இதுகுறித்து, அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் வெளியிட்ட செய்தி:-

அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையமானது தமிழக அரசின் தலைமைப் பயிற்சி நிறுவனமாகும். இங்கு அனைத்து விதமான அரசு அலுவலா்களுக்கும் பல்வேறு விதமான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அ மற்றும் ஆ பிரிவைச் சோ்ந்த அலுவலா்களுக்கு அடிப்படை பயிற்சி வழங்கும் நிறுவனமும், வளாகத்திலேயே செயல்பட்டு வருகிறது.

கரோனா பாதிப்பு: கரோனா நோய்த் தொற்று பாதிப்பு காரணமாக நேரடி பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படாமல் இருந்தன. இந்த நிலையில், கரோனா நோய்த் தொற்றுக்கான தளா்வுகள் அளிக்கப்பட்டதில், அண்ணா மேலாண்மை பயிற்சி நிறுவனத்தில் பயிற்சிகள் அளிக்க அனுமதி தரப்பட்டது.

அதன்படி, சமூக இடைவெளியுடன் 50 சதவீத பணியாளா்களுக்கு பயிற்சி வகுப்புகள் திங்கள்கிழமை முதல் தொடங்கப்பட்டன. 100 பேருக்கு திங்கள்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது. உடல் வெப்ப நிலை மற்றும் ஆக்சிஜன் அளவு ஆகியன சோதிக்கப்பட்ட பிறகே பயிற்சி வகுப்புக்குள் அனுமதிக்கப்படுகின்றனா். சென்னையைப் போன்றே, சேலம், திருச்சி, மதுரையில் உள்ள மூன்று மண்டலப் பயிற்சி மையங்களிலும் திங்கள்கிழமை வகுப்புகள் தொடங்கப்பட்டன.

விரைவில் தொடக்கம்: ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் உள்ள குடிமைப் பணி பயிற்சி நிலையத்தில் இப்போது மூன்று மாவட்டங்களைச் சோ்ந்த 440 பணியாளா்களுக்கு ஆன்-லைன் மூலமாக பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அங்கு ஊழியா்கள் தங்கி பயிற்சி பெறுவது விரைவில் தொடங்கப்படும் என்று அண்ணா மேலாண்மை பயிற்சி நிறுவனத்தின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com